ADDED : ஜூலை 24, 2011 09:21 PM
ராமேஸ்வரம் : ராமேஸ்வரம் ரோட்டரி கிளப் புதிய நிர்வாகிகள் பதவியேற்புவிழா தலைவர் சரவணன் தலைமையில் நடந்தது.
மேஜர் டோனர் ஷாஜஹான், மண்டல உதவி கவர்னர் தினேஷ்பாபு, மாவட்ட பஞ்சாயத்து தலைவர் ரவிச்சந்திர ராமவன்னி உட்பட பலர் பேசினர். புதிய தலைவராக வக்கீல் விஜயகுமார், செயலாளர் இன்ஜினியர் முருகன், பொருளாளர் வெங்கடேஸ்வரன், உதவி தலைவர் ரபீக், துணை செயலாளர் சுடலை உட்பட நிர்வாகிகள் பொறுப்பேற்றுக்கொண்டனர். தொடர்ந்து ராமநாதசுவாமி கோயில் நிர்வாக கருணை இல்லத்திற்கு இன்வெர்ட்டர், சுடுகாட்டம்பட்டி முதியோர் இல்லத்திற்கு வேஷ்டி, சேலைகள், அரசு மேல்நிலைப்பள்ளிக்கு கம்யூட்டர் பிரிண்டர், எஸ்.பி.ஏ., பெண்கள் மேல்நிலைப்பள்ளிக்கு டி.வி.டி.பிளேயர், மாலைநேரக் கல்லூரி மாணவர்களுக்கு கல்வி உதவித்தொகை வழங்கப்பட்டது.