Dinamalar-Logo
Dinamalar Logo


/உள்ளூர் செய்திகள்/விழுப்புரம்/தனித்தனி விபத்துகளில் 2 பேர் பரிதாப பலி

தனித்தனி விபத்துகளில் 2 பேர் பரிதாப பலி

தனித்தனி விபத்துகளில் 2 பேர் பரிதாப பலி

தனித்தனி விபத்துகளில் 2 பேர் பரிதாப பலி

ADDED : ஆக 17, 2011 03:41 AM


Google News

திண்டிவனம் : திண்டிவனம் அருகே ஏற்பட்ட தனித்தனி விபத்துகளில் இரண்டு பேர் இறந்தனர்.

திண்டிவனத்தை சேர்ந்தவர்கள் தணிகாசலம் மகன் அமிர்தராஜ்,35, நடராஜன் மகன் முனியப்பன்,32.

இருவரும் கடந்த 14ம் தேதி இரவு 11 மணிக்கு சாரம் பகுதிக்கு மோட்டார் சைக்கிளில் சென்றனர். திண்டிவனம்-சென்னை நெடுஞ்சாலை அருகே பின்னால் வந்த அடையாளம் தெரியாத வாகனம், மோட்டார் சைக்கிள் மீது மோதிவிட்டு சென்று விட்டது. இதில் பலத்த காயமடைந்த அமிர்தராஜ் பரிதாபமாக இறந்தார். மோட்டார் சைக்கிளை ஓட்டிச் சென்ற முனியப்பன் படுகாயத்துடன், புதுச்சேரி மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார்.

விபத்து குறித்து ரோஷனை போலீசார் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனர்.

மற்றொரு விபத்து: திண்டிவனம் அடுத்த கருவம்பாக்கம் காலனியை சேர்ந்த மொட்டை என்பவரின் மனைவி தனம்மாள்,55. இவர் கடந்த 14ம் தேதி மதியம் 2.30 மணிக்கு, கோவிந்தாபுரம் பஸ் நிறுத்தம் அருகில் நின்று கொண்டிருந்தார். அப்போது வேகமாக வந்த மினி சரக்கு வேன் ஒன்று மோதியதில் பலத்த காயமடைந்த தனம்மாள் புதுச்சேரி மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். அங்கு சிகிச்சை பலனின்றி அன்று இரவு 10.30 மணிக்கு அவர் இறந்தார்.

விபத்து குறித்து வெள்ளிமேடுபேட்டை போலீசார் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனர்.







      Our Apps Available On




      Dinamalar

      Follow us