Dinamalar-Logo
Dinamalar Logo


/செய்திகள்/தமிழகம்/கீழக்கரையில் போலி வாக்காளர் அட்டை: இலங்கை வாலிபர் கைது

கீழக்கரையில் போலி வாக்காளர் அட்டை: இலங்கை வாலிபர் கைது

கீழக்கரையில் போலி வாக்காளர் அட்டை: இலங்கை வாலிபர் கைது

கீழக்கரையில் போலி வாக்காளர் அட்டை: இலங்கை வாலிபர் கைது

ADDED : செப் 25, 2011 12:54 PM


Google News
கீழக்கரை :இலங்கையிலிருந்து சுற்றுலா விசாவில் தமிழகம் வந்த இலங்கை வாலிபரை, கீழக்கரையில் போலி வாக்காளர் அட்டையுடன் கியூ பிரிவு போலீசார் கைது செய்து போலீசில் ஒப்படைத்தனர்.கீழக்கரை மற்றும் ஏர்வாடி கடலோர பகுதிகளை மையமாக வைத்து இலங்கைக்கு கடத்தல் தொழில் களை கட்டி நடந்து வருவதாக கியூ பிரிவு போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது.இதன் பேரில் கடந்த சில நாட்களாக கண்காணிப்பு பணியை மேற்கொண்டனர். நேற்று இரவு இலங்கையை சேர்ந்த வாலிபர் கீழக்கரை கடற்கரையில் நடமாடுவதாக கிடைத்த தகவலின் பேரில் கியூ பிரிவு இன்ஸ்பெக்டர் கென்னடி, பரக்கத்துல்லா எஸ்.ஐ. மற்றும் போலீசார் அங்கு சென்றனர்.

கீழக்கரை வள்ளல் சீதக்காதி சாலையில் உள்ள தனியார் விடுதியில் உள்ளே நுழைந்த போது கியூ பிரிவு போலீசார் பிடித்து விசாரித்ததில், இலங்கை பத்தலம் மாவட்டம் கொளுந்தளுவை சேர்ந்த முகம்மது தம்லிக் யூசுப் மகன் முகம்மது ஹஸ்னி, 27.என தெரிவித்தார்.தொடர்ந்து மேற்கொண்ட விசாரணையில் முன்னுக்கு பின் முரணான தகவல் கூறியதால் சந்தேகமடைந்த போலீசார் அவரை சோதனை செய்த போது போலி வாக்காளர் அட்டையும்,10 சிம் கார்டும் இருந்தது.இவற்றை பறிமுதல் செய்து விசாரணைக்குப் பின் கீழக்கரை போலீசில் ஒப்படைத்தனர். இன்ஸ்பெக்டர் (பொறுப்பு)சுரேஷ் வழக்குப்பதிவு செய்தார்.





      Our Apps Available On




      Dinamalar

      Follow us