ADDED : ஆக 20, 2011 06:40 PM
கோவை: எஸ்.என்.ஆர்., கல்வி அறக்கட்டளை சார்பில், அக்கல்லூரியின் 2011-2012ம் கல்வியாண்டிற்கான மாணவர் மன்ற துவக்க விழா, கல்லூரி அரங்கில் நடந்தது.
மாணவர் மன்றத்தை கல்வி அறக்கட்டளையின் இணை நிர்வாக அறங்காவலர் விஜயகுமார் துவக்கி வைத்தார். தலைவராக முகமது அசாருதின், செயலாளராக பாலசுப்ரமணியம் மற்றும் பிற நிர்வாகிகள் பதவி ஏற்றனர். அதன்பின் துறைகளுக்கிடையோன கலை நிகழ்ச்சிகள் நடந்தன. இதில் பி.பி.எம்., துறை ஒட்டுமொத்தமாக முதல்பரிசையும், இரண்டாம் பரிசை கம்ப்யூட்டர் சயின்ஸ் துறையும் பெற்றன. வெற்றி பெற்றவர்களுக்கு கல்லூரி முதல்வர் செங்கோடன் நினைவு பரிசு மற்றும் சான்றிதழ்களை வழங்கினார்.