/உள்ளூர் செய்திகள்/விழுப்புரம்/பதிவு எண் மோசடி: 5 பேர் மீது வழக்குபதிவு எண் மோசடி: 5 பேர் மீது வழக்கு
பதிவு எண் மோசடி: 5 பேர் மீது வழக்கு
பதிவு எண் மோசடி: 5 பேர் மீது வழக்கு
பதிவு எண் மோசடி: 5 பேர் மீது வழக்கு
ADDED : செப் 25, 2011 01:43 AM
விழுப்புரம்:விழுப்புரம் அடுத்த செங்காடு கிராமத்தை சேர்ந்தவர் சுரேஷ்.
இவர் புதுச்சேரியிலுள்ள தனியார் நிதி நிறுவனம் மூலம் கடந்த ஜனவரி மாதத்தில்
4 லட்சம் ரூபாய் கடன் பெற்று ஈச்சர் மினி லாரி வாங்கியுள்ளார். மினிலாரி
வாங்கிய பின் ஒரு தவணை கூட திரும்பிச் செலுத்த வில்லை. இந்த கடனுக்கு அதே
பகுதியைச் சேர்ந்த அம்சா, புரு÷ஷாத்தமன் ஜாமீன் கொடுத்துள்ளனர்.
இந்நிலையில் செங்காடு கிராமத்தை சேர்ந்த மோகன்ராஜ், வளவனூர் பிரபு சேர்ந்து
மினிலாரியின் பதிவு எண்ணை மாற்றி விற்றுள்ளனர். தனியார் நிதி நிறுவன சட்ட
உதவியாளர் விவேகானந்தன் புகாரின் பேரில் வளவனூர் போலீசார் வழக்குப் பதிந்து
விசாரிக்கின்றனர்.