/உள்ளூர் செய்திகள்/மதுரை/மதுரையில் சுதந்திர தின விழா கொண்டாட்டங்கள்மதுரையில் சுதந்திர தின விழா கொண்டாட்டங்கள்
மதுரையில் சுதந்திர தின விழா கொண்டாட்டங்கள்
மதுரையில் சுதந்திர தின விழா கொண்டாட்டங்கள்
மதுரையில் சுதந்திர தின விழா கொண்டாட்டங்கள்
ADDED : ஆக 17, 2011 02:44 AM
மதுரை : மதுரையில் பல்வேறு இடங்களில் சுதந்திர தின விழா கொண்டாடப்பட்டது.
*பீ.பீ.குளத்தில் பி.எஸ்.என்.எல்., அலுவலகத்தில் பொது மேலாளர் ராஜம் கொடி
ஏற்றினார். துணை பொது மேலாளர் முருகேசன், உதவி பொது மேலாளர் சுப்பையா,
எஸ்.டி.இ., காளியப்பன், துணை மேலாளர் மூர்த்தி கலந்து கொண்டனர்.
*மதுரை ஐகோர்ட் கிளையில் நீதிபதி பி.ஜோதிமணி கொடி ஏற்றினார். சிறப்பாக சேவை
புரிந்த தியாகி மாயாண்டிபாரதி, எம்.எஸ்.செல்லமுத்து அறக்கட்டளை தலைவர்
டாக்டர் சி.ராமசுப்ரமணியம், காந்தி மியூசியம் நிர்வாகி மாரியப்பன்
ஆகியோருக்கு பரிசுகளை வழங்கினார். வக்கீல்கள் சாமிதுரை, அழகுமணி,
ஞானகுருநாதன் தொகுத்த சிறுவர் நலன் காக்கும் சட்ட புத்தகத்தை நீதிபதி
வெளியிட, நீதிபதி சி.எஸ்.கர்ணன் பெற்று கொண்டார். ரத்ததான முகாம் நடந்தது.
பதிவாளர்கள் விஜயன், சடையாண்டி, மாவட்ட முதன்மை செஷன்ஸ் நீதிபதி
கே.பாஸ்கரன், அரசு வக்கீல்கள் மகேந்திரன், கோவிந்தன், பாலசுப்ரமணியன்,
வக்கீல் சங்க நிர்வாகிகள் அருள்வடிவேல்சேகர், மாணிக்கம், ஆனந்தவள்ளி கலந்து
கொண்டனர்.
*இந்தியன் ஓவர்சீஸ் வங்கி மண்டல அலுவலகத்தில் முதன்மை மேலாளர்
திருநாவுக்கரசு கொடி ஏற்றினார். சங்க நிர்வாகிகள் வீரராகவன், மாரிமுத்து,
ஊழியர் சங்க உதவி பொது செயலாளர் சோமசுந்தரம் கலந்து கொண்டனர்.
*எல்லீஸ்நகரில் பா.ஜ., சார்பில் நடந்த விழாவிற்கு மண்டல் பொது செயலாளர்
ஹரிஹரசுதன் தலைமை வகித்தார். நிர்வாகிகள் சதீஷ்குமார், கராத்தேராஜா,
அற்புதராஜ் முன்னிலை வகித்தனர். நகர் தலைவர் ராஜரத்தினம் கொடி ஏற்றினார்.
நிர்வாகிகள் ராஜா,
ஹரிஹரன், ராதாகிருஷ்ணன் பங்கேற்றனர்.
*எஸ்.எஸ்.காலனி மாநகராட்சி பள்ளியில் நடந்த விழாவிற்கு தலைமையாசிரியை
ஜெயஸ்ரீ தலைமை வகித்தார். கவுன்சிலர் சுப்புராம் கொடி ஏற்றினார். லயன்ஸ்
கிளப் சார்பில் நலத்திட்ட உதவிகள்
வழங்கப்பட்டன.
புதூர்: *அய்யர்பங்களா சேவியர் மெட்ரிகுலேஷன் பள்ளியில் தாளாளர் ஜூலியன்
பிரகாஷ் கொடியேற்றினார். ஆசிரியை கார்த்திகா தேசபற்று குறித்து பேசினார்.
முதல்வர் உலகம்மாள் நன்றி கூறினார்.
திருப்பரங்குன்றம்: *விரகனூர் ஆரம்ப பள்ளி, அரசு உயர்நிலைப்பள்ளியில்,
ஊராட்சி தலைவர் திலகவதி கொடியேற்றினார். ஒன்றிய கவுன்சிலர் ராமகிருஷ்ணன்,
தலைமை ஆசிரியர் பூரணவள்ளி, ஆசிரியர் சுப்புலட்சுமி, முருகேசன், கணேசன்
கலந்து கொண்டனர்.
எழுமலை: *எழுமலை அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளி, பெண்கள் மேல்நிலைப்
பள்ளிகளில் பேரூராட்சி தலைவர் பொன்னுத்தாய் கொடியேற்றினார்.
தலைமையாசிரியர்கள் ராஜன், சுலோச்சனா கலந்து கொண்டனர்.
*போலீஸ் ஸ்டேஷனில் இன்ஸ்பெக்டர் தினகரன், பேரையூர் ஸ்டேஷனில் இன்ஸ்பெக்டர்
இளங்கோவன், டி.எஸ்.பி., அலுவலகத்தில் டி.எஸ்.பி., சக்திவேல் கொடியேற்றினர்.
*பேரூராட்சி அலுவலகத்தில் தலைவர் பொன்னுத்தாய், பேரையூர் பேரூராட்சி
அலுவலகத்தில் தலைவர் குருசாமி, தாசில்தார் அலுவலகத்தில் தாசில்தார்
கிருஷ்ணமூர்த்தி கொடியேற்றினர்.
*துவக்க பள்ளியில் செயலாளர் பாண்டியன் கொடியேற்றினார். தலைமையாசிரியர் தங்கராஜ், நிர்வாகி சுதாகர் கலந்து கொண்டனர்.
*துள்ளுக்குட்டிநாயக்கனூர் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளியில் கிராமக்
கல்விக் குழுத் தலைவர் பரமன் கொடியேற்றினார். தலைமையாசிரியர் வடிவேல்,
ஆசிரியர்கள் கலந்து கொண்டனர்.
* மதுரை மேற்கு ஒன்றிய அலுவலகத்தில் பி.டி.ஓ., லட்சுமி தலைமை வகித்தார்.
தலைவர் கண்ணன் கொடியேற்றினார். வட்டார வளர்ச்சி அலுவலர் ராஜா முன்னிலை
வகித்தார்.
* கண்ணனேந்தல் ஊராட்சி அலுவலகத்தில் தலைவர் ஜீவானந்தம் கொடியேற்றினார். துணைத் தலைவர் இருளாண்டி முன்னிலை வகித்தார்.
* நாகனாகுளம் ஊராட்சி அலுவலகத்தில் தலைவர் லட்சுமணன் கொடியேற்றினார். துணைத் தலைவர் செந்தில்குமார் முன்னிலை வகித்தார்.
* திருப்பாலை ஊராட்சி அலுவலகத்தில் தலைவர் சாரதாதேவி கொடியேற்றினார். துணைத் தலைவர் கவிதா முன்னிலை வகித்தார்.
* யாதவர் கல்லூரியில் துணைத் தலைவர் சிவராமகிருஷ்ணன் கொடியேற்றினார்.
முதல்வர் கண்ணன் வரவேற்றார். தென் மண்டல பல்கலை துணை செயலாளர் சீனிவாசலு
பேசினார். ஆட்சிக் குழு உறுப்பினர்கள் கண்ணன், பிச்சை, பாலகுரு, மேற்கு
ஒன்றிய தலைவர் கண்ணன் உட்பட பலர் கலந்து கொண்டனர். சுயநிதிப் பிரிவு
இயக்குனர் கோபால் நன்றி கூறினார்.
* சி.இ.ஓ.ஏ., மெட்ரிக்., பள்ளியில் தலைவர் சாமி தலைமை வகிக்க, மத்திய கலால்
மற்றும் சுங்க வரித்துறை கண்காணிப்பாளர் பாலசுப்பிரமணியன் கொடியேற்றினார்.
முதல்வர் மேரிரான்சம் ஜோஸ் வரவேற்றார். துணைத் தலைவர் விக்டர்தன்ராஜ்,
பொருளாளர் அசோக்ராஜ், செயலாளர் சவுந்திரபாண்டியன் உட்பட பலர் கலந்து
கொண்டனர். ஆசிரியர் ராஜா நன்றி கூறினார்.
* நாராயணபுரம் கேத்தி மெட்ரிக் பள்ளியில்ஓய்வு பெற்ற தலைமை ஆசிரியர்
ராமசாமி கொடியேற்றினார். தாளாளர் பொன்னிதேவி தலைமை வகித்தார். இன்ஜினியர்
யசோதா சுதந்திர தின உரையாற்றினார். முதல்வர் ஹரிராஜி நன்றி கூறினார்.
*மதுரை வீரமாமுனிவர் நடுநிலைப் பள்ளியில் நடந்த சுதந்திர தினவிழாவில்,
பள்ளித் தாளாளர் தாமஸ் கிறிஸ்டோபர் தலைமை வகித்தார். தலைமையாசிரியை
கிறிஸ்டி பேர்லி முன்னிலை வகித்தார். போலீஸ் கமிஷனர் (ஓய்வு) ஜெயசிங் தேசிய
கொடியேற்றினார். ஐகோர்ட் வக்கீல் மோகன், ஒருங்கிணைப்பாளர் குரூஸ் அந்தோணி
பல்லோட்டி, மாணவர்களுக்கு பரிசு வழங்கினர். ஆசிரியர்கள் தனலட்சுமி,
சுப்ரமணியன் ஏற்பாடுகளைச் செய்திருந்தனர்.
*மதுரை பசுமலை சி.எஸ்.ஐ., ஜெயராஜ் அன்னபாக்கியம் செவிலியர் கல்லூரியில்
நடந்த விழாவில், மதுரை ராமநாதபுரம் திருமண்டில செயலாளர் ஜேக்கப்
கொடியேற்றினார். முதல்வர் (பொறுப்பு) மெர்வின், துணை முதல்வர் ஜெயா
தங்கச்செல்வி, என்.எஸ்.எஸ்., அலுவலர் எட்வின் ராஜ்குமார், நிர்வாக அலுவலர்
ராஜா கிறிஸ்டியன் ஏற்பாடுகளைச் செய்திருந்தனர்.
*தென்மாநில பழைய பிளாஸ்டிக் வியாபாரிகள் சங்கத்தின் சார்பில் மதுரையில்
நடந்த விழாவில் தலைவர் விஜில்ராஜ் தலைமை வகித்தார். செயலாளர் செல்வன்
முன்னிலை வகித்தார். துணைத் தலைவர்கள் காசிலிங்கம், நடராஜன், இணைச்
செயலாளர்கள் செல்வமோகன், மணிமாறன், பொருளாளர் பாலகிருஷ்ணன், கவுரவ
ஆலோசகர்கள் சுப்ரமணியன், தவமுருகன் பங்கேற்றனர்.
*மதுரை திருநகர் காங்கிரஸ் கமிட்டி நடத்திய விழாவில் தலைவர் கோவர்தன் தலைமை
வகித்தார். காங்கிரஸ் முன்னாள் நிர்வாகி பொன்னுசாமி தேசிய கொடியேற்றினார்.
நகர துணைத் தலைவர் சீனிவாசன், பொருளாளர் கோபி மற்றும் பலர் பங்கேற்றனர்.
திருநகர் நகர செயலாளர் ரமேஷ் நன்றி கூறினார்.
*மதுரை கம்பர் மாநகராட்சி மேல்நிலைப்பள்ளி விழாவுக்கு தலைமையாசிரியர்
நடராஜன் தலைமை வகித்தார். ஆசிரியர் புகழேந்தி நிகழ்ச்சி ஏற்பாடு செய்தார்.
ஆசிரியர் சின்னச்சாமி நன்றி கூறினார்