நாளை சென்னை திரும்புகிறார் நடிகர் ரஜினிகாந்த்
நாளை சென்னை திரும்புகிறார் நடிகர் ரஜினிகாந்த்
நாளை சென்னை திரும்புகிறார் நடிகர் ரஜினிகாந்த்
ADDED : ஜூலை 12, 2011 12:43 AM
சென்னை : சிங்கப்பூரில், ஆறு வார சிகிச்சையை முடித்துக் கொண்டு, நடிகர் ரஜினிகாந்த் நாளை சென்னை திரும்புகிறார்.
கடந்த ஏப்ரல் மாதம் 29ம் தேதி, ராணா படப்பிடிப்பில் கலந்துகொண்ட போது, நடிகர் ரஜினிகாந்துக்கு திடீர் உடல்நலக் குறைவு ஏற்பட்டது. இசபெல்லா மற்றும் போரூர் ராமச்சந்திரா மருத்துவமனைகளில், இரண்டு முறை சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார். இதையடுத்து, உயர் சிகிச்சைக்காக சிங்கப்பூர் மவுன்ட் எலிசபெத் மருத்துவமனைக்குச் சென்றார். சிங்கப்பூர் டாக்டர்கள் அவரை நன்கு பரிசோதித்து, தீவிர சிகிச்சை அளித்து வந்தனர். சிகிச்சைக்கு பின், உடல் நிலையில் மாற்றம் ஏற்பட்டதையடுத்து, அங்கேயே ஒரு மாதம் காலம் தங்கி ஓய்வு எடுத்தார். இந்நிலையில், ஆறு வார சிகிச்சையை முடித்து, நடிகர் ரஜினிகாந்த் நாளை, (13ம்தேதி) சென்னை திரும்புகிறார்.