Dinamalar-Logo
Dinamalar Logo


/உள்ளூர் செய்திகள்/புதுக்கோட்டை/கல்வி நிறுவன முதல்வர் மோசடி வழக்கில் கைது

கல்வி நிறுவன முதல்வர் மோசடி வழக்கில் கைது

கல்வி நிறுவன முதல்வர் மோசடி வழக்கில் கைது

கல்வி நிறுவன முதல்வர் மோசடி வழக்கில் கைது

ADDED : ஆக 27, 2011 11:40 PM


Google News

புதுக்கோட்டை: புதுக்கோட்டையில் தனியார் கல்வி நிறுவன மோசடி வழக்கில் தொடர்புடைய கல்வி நிறுவன முதல்வரை தனிப்படை போலீஸார் கைது செய்தனர்.

புதுக்கோட்டை அடுத்த சத்தியமங்கலத்தில் முறையான அங்கீகாரமின்றி கடந்த ஒன்பது ஆண்டுகளாக இயங்கிவந்த 'ஃபயர் அன்ட் சேப்டி மேனேஜ்மென்ட்' என்ற தனியார் கல்வி நிறுவனத்தின் மீது ஏராளமான புகார்கள் எழுந்ததைத் தொடர்ந்து அந்நிறுவனத்தை போலீஸார் முன்னிலையில் வருவாய்த்துறை அதிகாரிகள் பூட்டி 'சீல்' வைத்தனர். மேலும் மாணவர்களுக்கு போலி சான்றிதழ் வழங்கியதாக அதன் இயக்குனர் முருகானந்தம், முதல்வர் ராஜசேகர் மற்றும் கல்வி நிறுவன ஊழியர்கள் மீது போலீஸார் வழக்குப்பதிவு செய்து அவர்களை தேடிவந்தனர். புதுக்கோட்டை டவுன் அம்பாள்புரத்தில் பதுங்கியிருந்த கல்வி நிறுவன முதல்வர் ராஜசேகரை தனிப்படை போலீஸார் நேற்று கைது செய்தனர். தலைமறைவாக உள்ள இயக்குனர் சோமசுந்தரம் உள்ளிட்டவர்களை போலீஸார் தேடிவருகின்றனர்.









      Our Apps Available On




      Dinamalar

      Follow us