Dinamalar-Logo
Dinamalar Logo


/உள்ளூர் செய்திகள்/மதுரை/விபத்தில்லா மதுரை; கலெக்டர் விருப்பம்

விபத்தில்லா மதுரை; கலெக்டர் விருப்பம்

விபத்தில்லா மதுரை; கலெக்டர் விருப்பம்

விபத்தில்லா மதுரை; கலெக்டர் விருப்பம்

ADDED : ஆக 06, 2011 03:46 AM


Google News
மதுரை:''மதுரையை ஒரு ஆண்டுக்குள் விபத்தில்லாத மாவட்டமாக்க வேண்டும்,'' என கலெக்டர் சகாயம் பேசினார்.மதுரையில் சாலை பாதுகாப்பு குழுக் கூட்டம் கலெக்டர் தலைமையில் நடந்தது.

அவர் பேசியதாவது: மாவட்டத்தில் ஆண்டுக்கு 700 பேர் சாலை விபத்தில் இறக்கின்றனர். ஒரு ஆண்டுக்குள் விபத்து நடக்காத மாவட்டமாக மதுரையை உருவாக்குவதே குறிக்கோள். அடுத்த மாதத்தில் 25 சதவீதமாவது குறைக்க வேண்டும்.போக்குவரத்துக்கு இடையூறாக உள்ள ஆக்கிரமிப்புகளை அகற்ற வேண்டும். மேலமாசிவீதியில் உள்ள பால்கடை, வக்கீல் புதுத்தெரு - யானைக்கல் வீதி சந்திப்பில் உள்ள பழக்கடைகள், தளவாய் தெரு- வடக்கு பெருமாள் மேஸ்திரிவீதி பால்பூத், பழக்கடை, காமராஜ் சாலை, கீழவாசல் சந்திப்பில் செருப்புக்கடை, கீழமாரட்வீதி, கே.கே.நகர், தெற்குவெளிவீதி என பல பகுதிகளிலும் உள்ள கடைகளை மாநகராட்சி, நெடுஞ்சாலை அலுவலர்கள் இணைந்து கூட்டு ஆய்வு மேற்கொண்டு, அகற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும், என பேசினார்.





      Our Apps Available On




      Dinamalar

      Follow us