/உள்ளூர் செய்திகள்/தஞ்சாவூர்/"108'க்கு தேவை அவசர சிகிச்சை : ஆம்புலன்ஸ் ஊழியர்கள் அளித்த பரபரப்பு புகார்"108'க்கு தேவை அவசர சிகிச்சை : ஆம்புலன்ஸ் ஊழியர்கள் அளித்த பரபரப்பு புகார்
"108'க்கு தேவை அவசர சிகிச்சை : ஆம்புலன்ஸ் ஊழியர்கள் அளித்த பரபரப்பு புகார்
"108'க்கு தேவை அவசர சிகிச்சை : ஆம்புலன்ஸ் ஊழியர்கள் அளித்த பரபரப்பு புகார்
"108'க்கு தேவை அவசர சிகிச்சை : ஆம்புலன்ஸ் ஊழியர்கள் அளித்த பரபரப்பு புகார்
ADDED : ஜூலை 19, 2011 12:43 AM
தஞ்சாவூர்: தனியார் நிறுவனம் மாநில அரசை ஏமாற்றிச் செய்யும் ஊழல், முறைகேடுளை தவிர்க்க, 108 ஆம்புலன்ஸ் சேவையை அரசே ஏற்று நடத்தவேண்டும் என்று தஞ்சை மாவட்ட இ.எம்.ஆர்.ஐ., மற்றும் 108 ஆம்புலன்ஸ் ஓட்டுனர் மற்றும் மருத்துவ உதவியாளர்கள், கலெக்டரிடம் பரபரப்பு புகார் மனு அளித்தனர். தஞ்சாவூர் கலெக்டர் அலுவலகத்தில் நேற்று நடந்த குறைதீர் கூட்டத்தில், கலெக்டர் பாஸ்கரனிடம் தஞ்சை மாவட்ட இ.எம்.ஆர்.ஐ., மற்றும் 108 ஆம்புலன்ஸ் ஓட்டுனர்களும், மருத்துவ உதவியாளர்கள் புகார் மனு அளித்தனர்.
மனுவில் தெரிவிக்கப்பட்டிருப்பதாவது: பொதுமக்களிடம் நற்பெயர் பெற்றிருக்கும் 108 ஆம்புலன்ஸ் சேவையில் பணிபுரியும் ஓட்டுனர்களும், மருத்துவ உதவியாளர்களும் மிகுந்த துன்பப்படுகிறோம். இப்பணியை செய்யும் ஜி.வி.கே., என்ற தனியார் நிறுவனத்திடம் குறைகளை எடுத்துச் சொன்னால், இடமாற்றம் செய்வதாக மிரட்டுகின்றனர். சொந்த ஊரில் இருந்து தொலைத்தூர ஊர்களுக்கு அடிக்கடி மாற்றப்படுகின்றோம். நிர்வாகிகள் எங்களை கேவலமாக, கொத்தடிமை போல நடத்துகின்றனர். கொடிய நோயாளிகளை கையாளும் எங்களுக்கு நோய்த் தடுப்பு மருத்துவ வசதிகள் செய்யவில்லை. தொடர்ந்து 12 மணி நேரம் வேலை செய்கிறோம். அதன்பிறகு வேலை செய்தாலும், அதற்கான ஊதியம் தருவதில்லை. ஓய்வு எடுக்க வழியில்லை. இயற்கை உபாதைகளை கழிக்க உரிய வசதிகள் இல்லை. இதுவரை 158 பணியாளர்கள் பணிநீக்கம் செய்யப்பட்டுள்ளனர். ஆம்புலன்ஸ் சேவைக்கான முழுச் செலவையும் மாநில அரசுதான் செய்கிறது. அதில் பல கோடி ரூபாய் அதிகாரிகளால் முறைகேடுகள் செய்யப்படுகின்றன. ஆம்புலன்ஸ் பழுது பார்ப்பதிலும், பராமரிப்பதிலும் கமிஷன் வாங்கப்படுகிறது.
ஆம்புலன்ஸ் சேவைக்காக பல நிறுவனங்கள் இலவசமாக மருந்துப் பொருட்களை வழங்குகின்றன. அதை பணம் கொடுத்து வாங்கியதாக கணக்கு காட்டி மோசடி செய்கின்றனர். பிடித்தம் செய்யும் இ.எஸ்.ஐ., பி.ஃஎப்., பணத்துக்கு முறையான கணக்கு இல்லை. எப்போது திரும்ப கிடைக்கும் என்ற விபரமில்லை. பணிநீக்கம் செய்யப்பட்டவர்கள் உட்பட இதுவரை யாருக்கும் பணம் கொடுக்கவில்லை. மூன்றாண்டாக எங்களிடம் மாதந்தோறும் 158 ரூபாய் பிடித்தம் செய்தும் இ.எஸ்.ஐ., மருத்துவக்காப்பீடு வழங்கவில்லை. ஆம்புலன்ஸ் சேவை லாப நோக்கில் நடத்தப்படுவதில்லை. தனியார் நிறுவனம் மாநில அரசை ஏமாற்றிச் செய்யும் ஊழல், முறைகேடுளை தவிர்க்க, 108 ஆம்புலன்ஸ் சேவையை அரசே ஏற்று நடத்தவேண்டும். வேலை நேரத்தை எட்டு மணி நேரமாக குறைக்கவேண்டும். அதற்குமேல் கூடுதல் நேரம் பணியாற்றும் ஊழியருக்கு இரட்டிப்புச் சம்பளம் வழங்கவேண்டும். முன்பு இருந்ததை போல, மூன்று ஓட்டுநர்கள், மூன்று மருத்துவ பணியாளர்களை நியமிக்க வேண்டும். குறைந்தபட்ச மாத சம்பளமாக 10 ஆயிரம் ரூபாய் வழங்கவேண்டும்.
நோய் தடுப்பு மருத்துவ வசதிகளும், மாதம் ஒருமுறை முழு உடல் பரிசோதனை செய்ய ஏற்பாடு செய்ய வேண்டும். பணியின்போது உயிரிழப்பு ஏற்பட்டால், 10 லட்ச ரூபாய் உதவித்தொகை வழங்கவேண்டும். ஆம்புலன்ஸ் நிறுத்த நிரந்தர இட வசதி, பணியாளருக்கு கழிப்பிடத்துடன் கூடிய தங்கும் அறை வசதி செய்ய வேண்டும். இ.எஸ்.ஐ., பி.ஃஎப்., குரூப் இன்சூரன்ஸ் தொகையை முறையாக பிடித்தம் செய்து, முறையாக கணக்குகளை பராமரிக்க வேண்டும். ஊழலை தடுக்க வாகன பராமரிப்பு பணிகளை அரசு பணிமனைகளில் நடத்தவேண்டும். இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.