Dinamalar-Logo
Dinamalar Logo


/உள்ளூர் செய்திகள்/சேலம்/ஏற்காடு மலைப்பாதையில் விபத்துகுழந்தை உள்பட 28 பேர் படுகாயம்

ஏற்காடு மலைப்பாதையில் விபத்துகுழந்தை உள்பட 28 பேர் படுகாயம்

ஏற்காடு மலைப்பாதையில் விபத்துகுழந்தை உள்பட 28 பேர் படுகாயம்

ஏற்காடு மலைப்பாதையில் விபத்துகுழந்தை உள்பட 28 பேர் படுகாயம்

ADDED : ஆக 25, 2011 02:09 AM


Google News
சேலம்: திருமண நிச்சயதார்த்தம் முடிந்து, ஏற்காட்டில் இருந்து கருமந்துறைக்கு சென்று கொண்டிருந்த வேன் மலைப்பாதையில், பாறையில் மோதி விபத்துக்குள்ளானது.

இதில், குழந்தை உள்பட 28 பேர் படுகாயமடைந்தனர்.சேலம் மாவட்டம், கருமந்துறையை அடுத்த கரியக்கோவிலைச் சேர்ந்தவர் குப்பன். அவரது மகன் மாணிக்கம்(28). ஏற்காடு செம்மநத்தம் கே.புத்தூரைச் சேர்ந்த காந்தாமணி(25) என்பவருக்கும் திருமண நிச்சயதார்த்தம் நேற்று நடந்தது. இந்த நிகழ்ச்சிக்காக, மாணிக்கம் மற்றும் உறவினர்கள், 30க்கும் மேற்பட்டோர் இரண்டு வேனில் ஏற்காடு சென்று விட்டு, மீண்டும் கருமந்துறையை நோக்கி வந்து கொண்டிருந்தனர்.மலைப்பாதையில், 60 அடி பாலம் அருகே வந்தபோது, டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்து ஒரு வேன் பாறையில் மோதி விபத்துக்குள்ளானது. வேனில் பயணம் செய்த ஜெகதீஸ்வரன், நான்கு வயது பெண் குழந்தை கனகா, சிவா, கவுதமன், அஜீத்குமார், ஜெயராஜ், வசந்தி, மலர், சரசு உள்ளிட்ட 28 பேர் படுகாயமடைந்தனர். காயமடைந்த அனைவரும் மீட்கப்பட்டு, சேலம் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டனர்.மாவட்ட கலெக்டர் மகரபூஷணம், அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருபவர்களை சந்தித்து ஆறுதல் கூறினார்.





      Our Apps Available On




      Dinamalar

      Follow us