ADDED : ஆக 24, 2011 02:45 AM
திருச்செந்தூர் : திருச்செந்தூரில் விஜயகாந்த் பிறந்தநாள் விழா கொண்டாடப்பட்டது.
திருச்செந்தூர் அமலிநகரில் மீனவரணி சார்பில் தேமுதிக.,நிறுவனர் விஜயகாந்த் பிறந்தநாள் விழா கொண்டாடப்பட்டது. இவ்விழாவிற்கு ஒன்றிய செயலாளர் செந்தில்குமார் தலைமை வகித்தார். மாவட்ட செயலாளர் சண்முகராஜா கலந்து கொண்டு மீனவரணி சார்பில் கட்டிய புதியகொடி மரத்தில் கட்சி கொடியேற்றினார். முதியோர் இல்லத்தில் உள்ள முதியவர்களுக்கு வேஷ்டி, சேலை மற்றும் இனிப்பு வழங்கினார். அமலிநகரில் தீ பிடித்து வீட்டை இழந்த பெண் மைதிலிக்கு உதவித் தொகை வழங்கினார். நிகழ்ச்சிகளில் மாவட்ட இளைஞரணி செயலாளர் சத்தியசீலன், மாவட்ட மாணவரணி செயலாளர் ஷேக்உமர், ஒன்றிய இளைஞரணி செயலாளர் சார்பில், ஒன்றிய மீனவரணி செயலாளர் ஜென்சன் அமலி குளோரின், திருச்செந்தூர் நகர செயலாளர் சேகர், நகர தலைவர் ராமன், நகர பொருளாளர் வீரமணி, நகர துணை செயலாளர்கள் பூக்கடை முருகன், தாமோதரலிங்கம், ஒன்றிய கேப்டன் மன்ற செயலாளர் சிவராஜ், மாவட்ட மகளிரணி துணை செயலாளர் பேச்சியம்மாள், நகர மகளிரணி செயலாளர் பன்னீர்செல்வி, 12 வது வார்டு ஜொலிஸ்டன், பதுவா இல்ல நிர்வாகி செல்வராஜ், 7வது வார்டு கனகு, தினேஷ்குமரன் உட்பட்ட பலர் ஏராளமானோர் கலந்து கொண்டனர்.