Dinamalar-Logo
Dinamalar Logo


/உள்ளூர் செய்திகள்/திருப்பூர்/திருப்பூர் மேயராக 40 பேருக்கு ஆசை

திருப்பூர் மேயராக 40 பேருக்கு ஆசை

திருப்பூர் மேயராக 40 பேருக்கு ஆசை

திருப்பூர் மேயராக 40 பேருக்கு ஆசை

ADDED : செப் 29, 2011 10:04 PM


Google News
திருப்பூர் : திருப்பூர் மாநகராட்சி மேயர் பதவிக்கான தேர்தலில் நேற்று 30 பேர் மனு தாக்கல் செய்தனர். இதுவரை மொத்தம் 40 பேர் மனு தாக்கல் செய்துள்ளனர். மாநகராட்சி மேயர் பதவிக்கு அ.தி.மு.க., - தி.மு.க., - தே.மு.தி.க., - காங்., - மா.கம்யூ., - இந்திய கம்யூ., - பா.ஜ., - ம.தி.மு.க., உள்ளிட்ட அரசியல் கட்சி வேட்பாளர்களுடன் சுயேச்சை வேட்பாளர்கள் ஏராளமானோர் மனு தாக்கல் செய்துள்ளனர்.மனு தாக்கல் செய்துள்ளோர் விபரம்: விசாலாட்சி (அ.தி.மு.க.,), அமுதா (மாற்று வேட்பாளர்)செல்வராஜ் (தி.மு.க.,), சாந்தாமணி (மாற்று) தினேஷ்குமார் (தே.மு.தி.க.,), ரேகா (மாற்று)சித்திக் (காங்.,), முத்துச்சாமி (மாற்று); சிவசுப்ரமணி ( போட்டி வேட்பாளர்) சின்னசாமி (பா.ஜ.,), வடிவேல் (பா.ம.க.,), அமிர்தவல்லி (மாற்று) ரவி (இந்திய கம்யூ.,) நாகராஜன் (ம.தி.மு.க.,), குபேந்திர பெருமாள் (மாற்று) செல்வராஜ் (வி.சி.,), துரை வளவன் (வி.சி., போட்டி வேட்பாளர்)

குரு (பகுஜன் சமாஜ்) முருகேச தேவர் (ஐ.ஜே.கே.,) பாண்டியன் (தமிழ் மாநில சிவசேனா) பாலாஜி (இ.ம.க.,)

சக்திவேல் (ஆதி தமிழர் பேரவை) சுந்தரம் (தலித் விடுதலை கட்சி) கதிரேசன் (கள் இயக்கம்) காளிஸ்வரன் (தேசிய வாத காங்.,) சரவணன் (சிவசேனா) சுயேச்சைகள்: கிருஷ்ணசாமி, ரஹீனா பர்வீன், முருகன், முகமது உபேஷ், சத்தியமூர்த்தி, லிங்கசாமி, செந்தில்குமார், கோபால், சுப்ரமணியம், ராஜகோபால், சண்முகவடிவேல், அகமது முஸ்தபா, ஜம்புலிங்கம் மற்றும் மாரியப்பன் ஆகியோர் வேட்பு மனு தாக்கல் செய்துள்ளனர். மாற்று வேட்பாளராக குடும்பத்தினர் மனு: அ.தி. மு.க., வேட்பாளர் விசாலாட்சிக்கு மாற்றாக அவரது சகோதரி அமுதா மனு தாக்கல் செய்துள்ளார். தி.மு.க., வேட்பாளர் செல்வராஜூக்கு மாற்றாக மனைவி சாந்தாமணி, தே.மு.தி.க., வேட்பாளர் தினேஷ்குமாருக்கு மாற்றாக மனைவி ரேகா, பா.ம.க., வேட்பாளர் வடிவேலுக்கு மாற்றாக மனைவி அமிர்தவல்லி ஆகியோர் வேட்பு மனு தாக்கல் செய்துள்ளனர். பரிசீலனையின்போது வேட்பாளர் மனு ஏற்கப்பட்டால், மாற்று வேட்பாளர்கள், தங்களது மனுக்களை வாபஸ் பெற்றுக் கொள்வர்.





      Our Apps Available On




      Dinamalar

      Follow us