மனவளர்ச்சி குன்றிய குழந்தைகள் மையம்
மனவளர்ச்சி குன்றிய குழந்தைகள் மையம்
மனவளர்ச்சி குன்றிய குழந்தைகள் மையம்
ADDED : செப் 03, 2011 12:46 AM
பவானி: அனைவருக்கும் கல்வி இயக்கம் சார்பில், பவானி அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளி வளாகத்தில், மனவளர்ச்சி குன்றிய குழந்தைகளுக்கான, இலவச பகல் நேர பராமரிப்பு மையம் திறக்கப்பட்டது.
கவுந்தப்பாடி தெற்கு யூனியன் பள்ளியில், முதலில் இம்மையம் இயங்கியது. அங்கு போதியளவு குழந்தைகள் வரவில்லை. இதையடுத்து, பவானிக்கு நேற்று மாற்றப்பட்டது. நேற்று ஒரே நாளில் 12 குழந்தைகள் சேர்ந்தனர். ஆறு முதல் 14 வயது வரையான மன வளர்ச்சி குன்றிய, கண்பார்வை குறைபாடுள்ள மற்றும் மாற்றுத்திறனாளி குழந்தைகள் இங்கு சேர்க்கப்படுகின்றனர். பள்ளியில் ஒரு ஆசிரியை மற்றும் நான்கு சிறப்பு ஆசிரியைகள் உள்ளனர். பள்ளியிலேயே பிஸியோதெரபி சிகிச்சை அளிக்கப்படும். காலையில் ஹார்லிக்ஸுடன் உணவு, மதியம் உணவு ஆகியவை வழங்கப்படும். மாலையில் குழந்தைகளை பெற்றோர் அழைத்து செல்லலாம்.