Dinamalar-Logo
Dinamalar Logo


/உள்ளூர் செய்திகள்/கரூர்/கரூரில் குப்பை மேடான போர் நினைவு சின்னம்

கரூரில் குப்பை மேடான போர் நினைவு சின்னம்

கரூரில் குப்பை மேடான போர் நினைவு சின்னம்

கரூரில் குப்பை மேடான போர் நினைவு சின்னம்

ADDED : ஆக 11, 2011 02:43 AM


Google News
கரூர்: கரூர் அருகே போர் நினைவு சின்னம் பராமரிப்பு இல்லாமல் குப்பை மேடாக காட்சியளிக்கிறது.

'சுதந்திர தினம் நெருங்கும் நிலையில், போர் நினைவு சின்னத்தை முறையாக பராமரிக்க வேண்டும்' என, கோரிக்கை எழுந்துள்ளது. தாந்தோணி நகராட்சி ராயனூர் வெள்ள கவுண்டனூரில், 1783ம் ஆண்டு ஏப்ரல் மாதம் 23 ம் தேதி, திப்பு சுல்தான் படையினருக்கும், ஆங்கிலேயர்களுக்கும் இடையை கடுமையான சண்டை ஏற்பட்டது. அதில் திப்பு சுல்தான் படையினர் மற்றும் ஆங்கிலேயர்கள், 19 பேர் இறந்தனர். 30க்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர். போரில் இறந்தவர்களுக்கு நினைவாக அப்போது வெள்ள கவுண்டனூரில் நினைவு சின்னம் அமைக்கப்பட்டது. 1857ம் ஆண்டு வேலூரில் நடந்த சிப்பாய் கலகமே முதல் சுதந்திர போர் என கூறப்படுகிறது. ஆனால், அதற்கு முன்பாகவே, நாட்டின் பல பகுதிகளில் நாட்டை அப்போது ஆ ண்ட மன்னர்களுக்கும், ஆங்கிலேயர்களுக்கும் இடையே பல போராட்டங்கள் நடந்துள்ளன. அந்த வகையில் நடந்ததுதான் கரூர் அருகே வெள்ள கவுண்டனூரில் திப்பு சுல்தான் படையினருக்கும், ஆங்கிலேயர்களுக்கும் இடையே நடந்த போராகும். வெள்ள கவுண்டனூரில், 228 ஆண்டுக்கு முன் கட்டப்பட்ட போர் நினைவு சின்னம் தற்போது பராமரிப்பு இல்லாமல் குப்பை மேடாக காட்சியளிக்கிறது. இந்திய சுதந்திர தினத்தின், 64 ஆண்டு விழா, வரும் 15ம் தேதி நாடு முழுக்க வெகு சிறப்பாக கொண்டாடப்படுகிறது. இதற்கான ஏற்பாடுகள் முழுவீச்சில் நடந்து வருகிறது. சுதந்திர தின விழாவுக்கு இன்னும் சில நாட்களே உள்ள நிலையில், கரூர் வெள்ள கவுண்டனூரில் உள்ள போர் நினைவு சின்னம், புதர் மண்டி கிடக்கிறது. சுதந்திர போராட்ட வரலாறுகளை, குழந்தைகளுக்கு சொல்லும் பெற்றோர்கள், கரூர் வெள்ள கவுண்டனூர் நினைவு சின்னத்தை காட்ட அழைத்துச் செல்கின்றனர். ஆனால், பராமரிப்பு இல்லாமல் உள்ள போர் நினைவு சின்னம், குப்பை மேடாக உள்ளதை கண்டு பெற்றோர்கள் பெரும் அதிர்ச்சியில் திரும்பிச் செல்கின்றனர்.எனவே, கரூர் வெள்ள கவுண்டனூரில் உள்ள போர் நினைவு சின்னத்தை உடனடியாக சீர்படுத்த மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்ற எதிர்பார்ப்பு மக்களிடையே எழுந்துள்ளது.





      Our Apps Available On




      Dinamalar

      Follow us