/உள்ளூர் செய்திகள்/கோயம்புத்தூர்/அ.தி.மு.க.,வேட்பாளரை மாற்றக்கோரி மீண்டும் அலுவலகத்தில் போராட்டம்அ.தி.மு.க.,வேட்பாளரை மாற்றக்கோரி மீண்டும் அலுவலகத்தில் போராட்டம்
அ.தி.மு.க.,வேட்பாளரை மாற்றக்கோரி மீண்டும் அலுவலகத்தில் போராட்டம்
அ.தி.மு.க.,வேட்பாளரை மாற்றக்கோரி மீண்டும் அலுவலகத்தில் போராட்டம்
அ.தி.மு.க.,வேட்பாளரை மாற்றக்கோரி மீண்டும் அலுவலகத்தில் போராட்டம்
ADDED : செப் 25, 2011 01:17 AM
கோவை :ஊ'அ.தி.மு.க., அறிவித்த இரண்டு வேட்பாளர்களை மாற்ற வேண்டும்' என, அக்கட்சி தொண்டர்கள் இதய தெய்வம் மாளிகையில் முற்றுகை போராட்டம் நடத்தினர்.கோவை மாநகராட்சி உள்ளாட்சி தேர்தலில் போட்டியிட அறிவிக்கப்பட்டிருக்கும் அ.தி.மு.க., வேட்பாளர்களை மாற்றக்கோரி, அ.தி.மு.க., கட்சி அலுவலகமான இதய தெய்வம் மாளிகையில் போராட்டங்கள் தொடர்கின்றன.
மாநகராட்சி 34வது வார்டு வேட்பாளராக ஜெயராமன் அறிவிக்கப்பட்டுள்ளார். இவரை மாற்றக்கோரி, எம்.எல்.ஏ., ஆறுக்குட்டி மகன் அசோக் தலைமையில், நேற்றுமுன்தினம் இரவு இதய தெய்வம் மாளிகையில் உள்ளிருப்பு போராட்டம் நடத்தப்பட்டது. மாநகராட்சியின் 97 மற்றும் 93வது வார்டு வேட்பாளர்களை மாற்ற வேண்டும் என, முன்னாள் எம்.எல்.ஏ., கே.பி., ராஜுவை, கட்சி தொண்டர்கள் நேற்று முற்றுகையிட்டனர்.குறிச்சி நகராட்சி 17-18வது வார்டுகள், மாநகராட்சியின் 97வது வார்டாக மாற்றப்பட்டுள்ளது. இதன் வேட்பாளராக அ.தி.மு.க., சார்பில் மணிமாறன் அறிவிக்கப்பட்டுள்ளார். மணிமாறனை மாற்றக்கோரி, இப்பகுதி கட்சி தொண்டர்கள் முற்றுகையிட்டனர். மாநகராட்சி 93வது வார்டிற்கு (குனியமுத்தூர் பழைய 5வது வார்டு) செல்வி வேட்பாளராக நிறுத்தப்பட்டுள்ளார். 'கட்சி வேட்பாளருக்கு எதிராக, கடந்த முறை சுயேச்சையாக நின்றவர். இவருக்கு சீட் வழங்கக் கூடாது' என, முற்றுகை நடந்தது. முற்றுகையிட்ட கட்சி தொண்டர்களிடம் முன்னாள் எம்.எல்.ஏ., ராஜு பேச்சுவார்த்தை நடத்தினார்.