/உள்ளூர் செய்திகள்/தூத்துக்குடி/மயக்க மருந்து கொடுத்து 50 பவுன் நகைகள் அபேஸ் செய்து ஓடிய வேலைக்கார பெண்மயக்க மருந்து கொடுத்து 50 பவுன் நகைகள் அபேஸ் செய்து ஓடிய வேலைக்கார பெண்
மயக்க மருந்து கொடுத்து 50 பவுன் நகைகள் அபேஸ் செய்து ஓடிய வேலைக்கார பெண்
மயக்க மருந்து கொடுத்து 50 பவுன் நகைகள் அபேஸ் செய்து ஓடிய வேலைக்கார பெண்
மயக்க மருந்து கொடுத்து 50 பவுன் நகைகள் அபேஸ் செய்து ஓடிய வேலைக்கார பெண்
திசையன்விளை : உவரியில் வயதான தம்பதியிடம் நெல்லிக்காய் ஜூஸில் மயக்க மருந்து கொடுத்து 50 பவுன் தங்க நகைகள் அபேஸ் செய்து ஓடிய வேலைக்கார பெண்ணை போலீசார் தேடிவருகின்றனர்.
இந்த நேரத்தில் வேலைக்கார பெண் புவனேஸ்வரியின் கழுத்தில் இருந்த 31பவுன் தாலி செயின் மற்றும் செயின், வளையல்கள் உட்பட சுமார் 50பவுன் நகைகளை கழட்டி கொண்டு வெளியேறிவிட்டாராம். உறவினர்கள் வந்து பார்த்தபோது இருவரும் மயக்க நிலையில் இருந்தனர். இவர்கள் திசையன்விளையில் உள்ள ஆஸ்பத்திரியில் சேர்க்கப்பட்டு மேல் சிகிச்சைக்காக நாகர்கோவிலில் உள்ள தனியார் ஆஸ்பத்திரியில் சேர்க்கப்பட்டனர். இதுகுறித்து உவரி போலீசில் புகார் செய்யப்பட்டது. சம்பவ இடத்திற்கு மாவட்ட எஸ்பி விஜயேந்திரபிதரி, ஏடிஎஸ்பி சொக்கலிங்கம், வள்ளியூர் ஏஎஸ்பி விஜயகுமார், திசையன்விளை இன்ஸ்பெக்டர் சங்கர் ஆகியோர் விரைந்து சென்று விசாரணை நடத்தி வருகின்றனர். 50 பவுன் நகைகளுடன் மாயமான இளம் பெண் ரோஸ்கலர் பூபோட்ட சேலையும், ஆத்தங்கரை பள்ளிவாசல் செல்லும் தனியார் பஸ்சில் சென்றதாகவும் அருகில் இருந்தவர்கள் பார்த்ததாக கூறுகின்றனர். நகையுடன் மாயமான பெண்ணை போலீசார் தேடி வருகின்றனர். இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.