ADDED : செப் 17, 2011 02:14 AM
சாயர்புரம் : சாயர்புரம், செபத்தையாபுரம் லயன்ஸ் கிளப் மற்றும் தூத்துக்குடி பி.ஆர்.ஆர்.பல் ஆஸ்பத்திரி சார்பில் இலவச பல் மருத்துவ முகாம் சாயர்புரம் அருகே உள்ள பேய்க்குளம் ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளியில் நடந்தது.
முகாமில் லயன்ஸ் கிளப் செயலர் பேராசிரியர் ஆலயமணி வரவேற்றார். லயன்ஸ் கிளப் மண்டல தலைவர் ராஜசீலன் தலைமை வகித்து முகாமை துவக்கி வைத்தார். லயன்ஸ் சங்க தலைவர் ரவீந்திரன் முன்னிலை வகித்தார். தூத்துக்குடி பி.ஆர்.ஆர்.பல் ஆஸ்பத்திரி டாக்டர் தினேஷ் காமராஜ் பல் பராமரிப்பு பற்றி பள்ளி மாணவ, மாணவியருக்கு கூறினார். தொடர்ந்து அவர் தலைமையில் பல் டாக்டர்கள் தீபக், வைகுண்டம் மற்றும் மருந்தாளுனர்கள் மோகன், பெத்து முருகன் ஆகியோர் அடங்கிய குழுவினர் பள்ளி மாணவ, மாணவியர் மற்றும் ஊர் பொது மக்களுக்கு பல் சிகிச்சை அளித்தனர். முகாமில் லயன்ஸ் கிளப் உறுப்பினர் ஞானராஜ், ஆசிரியர் பொன்ராஜ் ஜாண்சன், ஜேக்கப், சாயர்புரம் டவுன் பஞ்.,கவுன்சிலர் பேய்க்குளம் ஜெயக்குமார் உட்பட பலர் கலந்து கொண்டனர். முடிவில் பேய்க்குளம் ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளி தலைமையாசிரியர் சம்பத் சாமுவேல் நன்றி கூறினார்.