ADDED : செப் 20, 2011 01:00 AM
கோவை : கோவையில் இரண்டு மையங்களில் நேற்று நடந்த ஆசிரியர் இடமாறுதல்
கவுன்சிலிங்கில், 298 ஆசிரியர்கள் இடமாறுதல் உத்தரவு பெற்றனர்.
இடைநிலை,
பட்டதாரி மற்றும் முதுநிலை பட்டதாரி ஆசிரியர்களுக்கான இடமாறுதல்
கவுன்சிலிங் (மாவட்டத்துக்கு உள்ளே), சி.எஸ்.ஐ., ஆண்கள்
மேல்நிலைப்பள்ளியில் நேற்று நடந்தது. ஆசிரியர்களின் தகுதியின்
அடிப்படையில், மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் ஆனந்தி மற்றும் கோவை,
பொள்ளாச்சி கல்வி அலுவலர்கள் கவுன்சிலிங்கை நடத்தினர். கோவை நகரில் குறைவாக
இருந்த சில காலியிடங்களும், தகுதியின் அடிப்படையில் மாறுதல் கேட்டு
காத்திருந்த ஆசிரியர்களுக்கு முறைப்படி வழங்கப்பட்டது. பங்கேற்ற 800
ஆசிரியர்களில் 148 பேர் இடமாறுதல் உத்தரவு பெற்றுச் சென்றனர். இரண்டாவது
நாளாக இன்றும் கவுன்சிலிங் நடக்கிறது. ஒன்றியம் விட்டு ஒன்றியம் மாறுதல்:
மாவட்ட தொடக்கக் கல்வி அலுவலர் அய்யண்ணன் தலைமையில் தொடக்கக்கல்வி,
நடுநிலைப்பள்ளி ஆசிரியர்களுக்கான இடமாறுதல் மற்றும் பதவியுயர்வு
கவுன்சிலிங் நடக்கிறது. @நற்று 150 பேர் இடமாறுதல் உத்தரவு பெற்றுச்
சென்றனர்.


