Dinamalar-Logo
Dinamalar Logo


/உள்ளூர் செய்திகள்/நாகப்பட்டினம்/வேதையில் பரவும் மர்ம நோய் மருத்துவக்குழுவினர் ஆய்வு

வேதையில் பரவும் மர்ம நோய் மருத்துவக்குழுவினர் ஆய்வு

வேதையில் பரவும் மர்ம நோய் மருத்துவக்குழுவினர் ஆய்வு

வேதையில் பரவும் மர்ம நோய் மருத்துவக்குழுவினர் ஆய்வு

ADDED : ஆக 21, 2011 02:25 AM


Google News

வேதாரண்யம்: வேதாரண்யம் அடுத்த மருதூர் வடக்கு கிராமத்தில் 200க்கும் மேற்பட்ட பள்ளி குழந்தைகள் மற்றும் பெண்களுக்கு காலில் சிவந்த நிறத்தில் படலம் காணப்பட்டது.

இது குறித்து தகவல் அறிந்த கலெக்டர் முனுசாமி மருத்துவக்குழுவினரை அனுப்பி உடனடியாக சிகிச்சை அளிக்க உத்தரவிட்டார். நாகை சுகாதார பணிகள் இணை இயக்குனர் கோவிந்தசாமி மேற்பார்வையில் வட்டார மருத்துவம அலுவலர் சுந்தரராஜன், டாக்டர் ஜெயகுமார், ராஜ்குமார், விக்ரம் மற்றும் டாக்டர்கள் தலைமையிலான மருத்துவ குழுவினர் பாதிக்கப்பட்ட குழந்தைகளுக்கு சிகிச்சை அளித்தனர். மருதூர் வடக்கை சேர்ந்த பஞ்சாயத்து நடுநிலைப்பள்ளி ராஜாபுரம் தேனி உதவி நடுநிலைப்பள்ளி, மஞ்சக்கன்னி உதவி நடுநிலைப்பள்ளி ஆகிய பள்ளிகளை சேர்ந்த 200க்கும் மேற்ப்பட்ட மாணவ, மாணவியருக்கு மருத்துவ குழுவினர் சிகிச்சை அளித்தனர். இவர்களது ரத்தம் பரிசோதனைக்காக அனுப்பட்டது. பாதிக்கப்பட்ட குழந்தைகளுக்கு சிகிச்சை அளிப்பதை மாவட்ட கலெக்டர் முனுசாமி, எம்.எல்.ஏ., காமராஜ் ஆகியோர் பார்வையிட்டனர்.



கலெக்டர் முனுசாமி கூறியதாவது: மருதூர் வடக்கை சேர்ந்த குழந்தைகள் மற்றும் பெரியவர்களுக்கு காலிலில் சிவப்பு போன்ற புள்ளி உள்ளது. இதை மருத்துவ குழுவினர் பரிசோதித்து சிகிச்சை அளித்துள்ளனர். ரத்த மாதிரியும் பரிசோதனைக்கு அனுப்பட்டுள்ளது. இதனால் நமச்சலோ பெரும் பாதிப்போ இல்லை. இது குறித்து அஞ்ச தேவையில்லை. சிகிச்சை அளித்து குணப்படுத்தி விடலாம். இவ்வாறு அவர் கூறினார். ஆய்வின்போது, தாசில்தார் அசோகன், ஆர்.ஐ., நாகராஜன் மற்றும் வருவாய்த்துறை அதிகாரிகள் உடன் சென்றனர்.







      Our Apps Available On




      Dinamalar

      Follow us