Dinamalar-Logo
Dinamalar Logo


/உள்ளூர் செய்திகள்/ராமநாதபுரம்/ஜொலிக்கும் "ஜமுனா பாரி' ஆடுகள் : குட்டி ரூ.10,000; பெரியது ரூ.2 லட்சம்

ஜொலிக்கும் "ஜமுனா பாரி' ஆடுகள் : குட்டி ரூ.10,000; பெரியது ரூ.2 லட்சம்

ஜொலிக்கும் "ஜமுனா பாரி' ஆடுகள் : குட்டி ரூ.10,000; பெரியது ரூ.2 லட்சம்

ஜொலிக்கும் "ஜமுனா பாரி' ஆடுகள் : குட்டி ரூ.10,000; பெரியது ரூ.2 லட்சம்

ADDED : ஆக 14, 2011 10:45 PM


Google News

ராமநாதபுரம் : வெள்ளை நிறத்தில், போர்வீரனாய் காட்சியளிக்கும் 'ஜமுனா பாரி' ஆடுகள் 2 லட்சம் ரூபாய் வரை விற்கப்படுகிறது.

ராமநாதபுரம் சின்னக்கடையை சேர்ந்த சஸ்லான் என்பவர் ஜமுனாபாரி ரக ஆடுகளை சேலம், மதுரை, வட மாநிலங்களிலிருந்து வாங்கி, செல்லப்பிராணியாக வளர்த்து வருகிறார். இவரிடம் 30க்கும் மேற்பட்ட ஆடுகள் உள்ளன. பாதி ஆடுகள் தோப்புகளில் பராமரிக்கப்பட்டு, மேய்ச்சலுக்கு விடப்பட்டுள்ளன.

இதன் கிடாவுக்கு தனி மதிப்பு உண்டு. உடல் முழுவதும் ஜொலிக்கும் பொசு, பொசுவென்ற ரோமம், நீண்ட அழகிய காதுகள், தூணாக தோன்றும் இதன் கால்கள் ஆகியவை ரசிக்கும்படி இருக்கும். வளர்ந்த கிடாக்கள் 45 கிலோ வரை எடை உள்ளவை. இவற்றின் கறிக்கு தனி கிராக்கி உள்ளது. ரம்ஜான் பண்டிகையையொட்டி, வசதியானவர்கள் இந்த ஜமுனா பாரி ரக ஆடுகளை பிரியாணிக்கு பயன்படுத்துகின்றனர். இவை ரூ. 80 ஆயிரத்திலிருந்து இரண்டு லட்சம் வரை விலை பேசப்படுகிறது. சினைக்கு மட்டுமே இவை அதிகளவில் பயன்படுத்தப்படும், இதுகுறித்து சஸ்லான் கூறியதாவது: பாதாம் பருப்பு, முந்திரி பருப்பு, பிஸ்தா, பேரிச்சம் பழம் என்று இதற்கான 'மெனு'வே தனி. மற்ற நேரங்களில் 'டயட்'டில் வைத்திருப்போம். இந்த ஆடுகள், அசந்தால் ஆளையே தூக்கி வீசி விடும். இவற்றை இரண்டு புறமும் கயிறால் கட்டி வைத்தால் தான் கட்டுப்படுத்த முடியும். இல்லையென்றால், கட்டியிருக்கும் சுவரை முட்டிக்கொண்டே இருக்கும். குட்டி ஈன்ற ஆட்டிலிருந்து தினமும் ஒரு லிட்டர் பால் கறக்கப்படுகிறது. அதுவும் விற்பனைக்கல்ல. தாய்ப்பால் சுரக்காத பெண்கள் கேட்கும் போது இலவசமாக வழங்கி வருகிறேன், என்றார்.







      Our Apps Available On




      Dinamalar

      Follow us