கம்ப்யூட்டர் திருட்டு: ஆசாமிக்கு வலை
கம்ப்யூட்டர் திருட்டு: ஆசாமிக்கு வலை
கம்ப்யூட்டர் திருட்டு: ஆசாமிக்கு வலை
ADDED : ஜூலை 26, 2011 11:05 PM
சேத்தியாத்தோப்பு : பள்ளி நிர்வாகி வீட்டில் கம்ப்யூட்டர் திருடிய மர்ம ஆசாமியை போலீசார் தேடி வருகின்றனர்.
சேத்தியாத்தோப்பு டி.ஜி.எம்., மேல்நிலைப்பள்ளி நிர்வாகி ராமச்சந்திரன், 38.
பள்ளி அருகிலேயே வீடு உள்ளது. நேற்று முன்தினம் இரவு ராமச்சந்திரன் வீட்டை பூட்டி விட்டு வெளியூருக்கு சென்று விட்டார். நேற்று காலை திரும்பி வந்து பார்த்தபோது மாடி கதவு உடைக்கப்பட்டிருந்தது. உள்ளே சென்று பார்த்த போது கம்ப்யூட்டர் காணாமல் போயிருப்பது தெரியவந்தது. ராமச்சந்திரன் கொடுத்த புகாரின் பேரில் சேத்தியாத்தோப்பு போலீசார் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனர்.