Dinamalar-Logo
Dinamalar Logo


/உள்ளூர் செய்திகள்/நாமக்கல்/பற்றி எரியும் காஸ் லைன் லாரி டிரைவர் கருகி பலி

பற்றி எரியும் காஸ் லைன் லாரி டிரைவர் கருகி பலி

பற்றி எரியும் காஸ் லைன் லாரி டிரைவர் கருகி பலி

பற்றி எரியும் காஸ் லைன் லாரி டிரைவர் கருகி பலி

ADDED : ஜூலை 31, 2011 01:35 AM


Google News

திருவாரூர்: திருவாரூர் அருகே ஓ.என்.ஜி.சி., நிறுவனத்துக்குச் சொந்தமான காஸ் லைனில் நேற்றிரவு லாரி உரசியதால் ஏற்பட்ட தீ விபத்தில், டிரைவர் பரிதாபமாக உடல் கருகி உயிரிழந்தார்.திருவாரூர் சுற்றுவட்டாரப் பகுதிகளில் ஓ.என்.ஜி.சி., நிறுவனம் மூலம் காஸ் எடுக்கப்பட்டு பல்வேறு ஊர்களுக்கு பாதுகாப்பாக பைப் லைன் மூலம் கொண்டு செல்லப்படுகிறது.திருவாரூர்-மன்னார்குடி சாலையில் உள்ள வெள்ளக்குடி என்ற இடத்திலிருந்து பைப்-லைன் மூலம் காஸ் எடுக்கப்படுகிறது.

இந்த ஊரின் அருகில் உள்ள தியானபுரம் என்ற இடத்தின் வழியே காஸ் லைன் செல்கிறது.இந்த காஸ் லைன் மீது நேற்றிரவு 7.30 மணியளவில் அவ்வழியே அரிசி லோடுடன் வந்த லாரி எதிர்பாராத விதமாக உரசியது. இதனால், காஸ் லைன் திடீரென தீப்பற்றி எரிய ஆரம்பித்தது.இதனால் அதிர்ச்சியடைந்த சுற்றுப்பகுதிகளில் உள்ள பொதுமக்கள் தங்களது வீட்டை காலி செய்துவிட்டு ஒரு கிலோ மீட்டருக்கு அப்பால் சென்றுவிட்டனர்.தீ விபத்தை அறிந்த திருவாரூர் தீயணைப்பு நிலைய அதிகாரிகள் விரைந்து சென்று, தீயை அணைக்கும் முயற்சியில் ஈடுபட்டும் பலனில்லை. உடனடியாக சுற்றுப்பகுதிகளிலிருந்து பல்வேறு தீயணைப்பு வாகனங்கள் வரவழைக்கப்பட்டு தீயை அணைக்கும் பணி நடந்துவருகிறது.திருவாரூர் மாவட்ட போலீஸ் எஸ்.பி., தினகரன் உள்ளிட்ட அதிகாரிகள் தீயை அணைக்கும் முயற்சியிலும், அப்பகுதியில் பாதுகாப்பு ஏற்பாடுகளையும் நேரில் செய்து வருகின்றனர்.நேற்றிரவு 7.30 மணி முதல் தொடர்ந்து காஸ்லைன் எரிந்து வருவதால் திருவாரூர் மாவட்டம் முழுவதும் பரபரப்பு நிலவி வருகிறது.







      Our Apps Available On




      Dinamalar

      Follow us