/உள்ளூர் செய்திகள்/கடலூர்/சுற்றுலாப் பயணிகளின் வசதிக்காக உணவுடன் கூடிய உறைவிட திட்டம்சுற்றுலாப் பயணிகளின் வசதிக்காக உணவுடன் கூடிய உறைவிட திட்டம்
சுற்றுலாப் பயணிகளின் வசதிக்காக உணவுடன் கூடிய உறைவிட திட்டம்
சுற்றுலாப் பயணிகளின் வசதிக்காக உணவுடன் கூடிய உறைவிட திட்டம்
சுற்றுலாப் பயணிகளின் வசதிக்காக உணவுடன் கூடிய உறைவிட திட்டம்
ADDED : ஆக 23, 2011 11:40 PM
கடலூர் : சுற்றுலாத் துறையின் உணவுடன் கூடிய உறைவிடத் திட்டத்தில் சேர
விரும்புவோர் தங்களது பெயர்களை பதிவு செய்து கொள்ள வேண்டும் என கலெக்டர்
அறிவித்துள்ளார்.
இதுகுறித்து அவர் விடுத்துள்ள செய்திக்குறிப்பு: தமிழக
முதல்வரின் அறிவுரைப்படி சுற்றுலாத் துறை மூலம் தமிழகத்தில் தனியார்
பங்களிப்புடன் உணவுடன் கூடிய உறைவிடத் திட்டம் விரிவுப்படுத்த நடவடிக்கை
எடுக்கப்பட்டு வருகிறது. கடலூர் மாவட்டத்திற்கு வரும் உள்நாட்டு மற்றும்
வெளிநாட்டு சுற்றுலா பயணிகளின் வசதிக்காக சுற்றுலா துறை மூலம் உணவுடன்
கூடிய உறைவிட திட்டம் விரிவுப்படுத்தப்பட உள்ளது. இத்திட்டத்தில் தங்களது
பெயரை பதிவு செய்து கொள்பவர்கள், தங்கள் வீடுகளில் உள்ள அறைகளை சுற்றுலாப்
பயணிகளுக்கு வாடகைக்கு விடலாம். தமிழகத்தின் கலாசாரத்தை பறைசாற்றுகின்ற
உணவுடன் கூடிய உறைவிட திட்டத்தின் கீழ் பதிவு செய்பவர்களின் தனியார்
வீடுகள் பற்றிய விவரம் தமிழ்நாடு சுற்றுலா இணையதளம் மற்றும் கையேட்டில்
வெளியிடப்படும். எனவே, மாவட்டத்தில் சுற்றுலாத் தலங்களில் உள்ளவர்கள்
தங்கள் வீடுகளில் சுற்றுலாப் பயணிகளை தங்க வைக்க விருப்பம் உள்ளவர்கள்
சிதம்பரத்தில் உள்ள சுற்றுலா அலுவலகத்தில் தங்கள் பெயரை பதிவு செய்து கொள்ள
வேண்டும். மேலும், இதுகுறித்து விவரம் வேண்டுவோர் 04144-238739, 97890
55400 ஆகிய தொலைபேசி எண்களில் தொடர்பு கொண்டு தெரிந்து கொள்ளலாம். இவ்வாறு
கலெக்டரின் செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளது.