/உள்ளூர் செய்திகள்/திருச்சி/9 புதிய இன்ஸ்பெக்டர்கள் திருச்சி மாநகருக்கு நியமனம்9 புதிய இன்ஸ்பெக்டர்கள் திருச்சி மாநகருக்கு நியமனம்
9 புதிய இன்ஸ்பெக்டர்கள் திருச்சி மாநகருக்கு நியமனம்
9 புதிய இன்ஸ்பெக்டர்கள் திருச்சி மாநகருக்கு நியமனம்
9 புதிய இன்ஸ்பெக்டர்கள் திருச்சி மாநகருக்கு நியமனம்
ADDED : ஜூலை 21, 2011 02:43 AM
திருச்சி: திருச்சி மாநகரில் உள்ள போலீஸ் ஸ்டேஷன்களுக்கு ஒன்பது புதிய இன்ஸ்பெக்டர்கள் நியமனம் செய்யப்பட்டுள்ளனர்.
திருச்சி மாநகரில் உள்ள போலீஸ் ஸ்டேஷன்களில் பணியாற்றி 13க்கும் மேற்பட்ட இன்ஸ்பெக்டர்கள் கடந்த சில வாரங்களுக்கு முன் தென்மாவட்டங்களுக்கு பணியிட மாறுதல் செய்யப்பட்டவர். அவர்களுக்கு பதிலாக புதிய இன்ஸ்பெக்டர்கள் நியமிக்கப்படாமல் இருந்தது. தற்போது புதிய இன்ஸ்பெக்டர்களை நியமித்து உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. பாலக்கரை போலீஸ் இன்ஸ்பெக்டராக முருகவேலும், ஸ்ரீரங்கம் இன்ஸ்பெக்டராக சேகரும், காந்திமார்க்கெட் (க்ரைம்) இன்ஸ்பெக்டராக மூர்த்தியும், பொன்மலை இன்ஸ்பெக்டராக நீலகண்டனும், தில்லைநகர் இன்ஸ்பெக்டராக செந்தில்குமாரும், விமான நிலைய இன்ஸ்பெக்டராக தங்கவேலும், மாநகர குற்றப்பிரிவு இன்ஸ்பெக்டராக நீதிமோகனும், காந்திமார்க்கெட் இன்ஸ்பெக்டராக கண்ணதாசனும், ஸ்ரீரங்கம் அனைத்து மகளிர் போலீஸ் ஸ்டேஷன் இன்ஸ்பெக்டராக மரகதமும் நியமிக்கப்பட்டுள்ளனர். இவர்கள் அனைவரும் இன்னும் சில நாட்களில் பொறுப்பேற்பார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அதேபோல் காலியாக உள்ள பொன்மலை அனைத்து மகளிர் போலீஸ் ஸ்டேஷன் , உறையூர், எடமலைப்பட்டிபுதூர், கண்ட்ரோல் ரூம், மாநகர குற்றப்பிரிவு ஆகியவற்றுக்கு மட்டும் இன்ஸ்பெக்டர்கள் நியமிக்கப்பட வேண்டியுள்ளது.


