Dinamalar-Logo
Dinamalar Logo


/உள்ளூர் செய்திகள்/தர்மபுரி/பாதுகாப்பான குடிநீர் வழங்க கோரி கிராம மக்கள் திடீர் சாலை மறியல்

பாதுகாப்பான குடிநீர் வழங்க கோரி கிராம மக்கள் திடீர் சாலை மறியல்

பாதுகாப்பான குடிநீர் வழங்க கோரி கிராம மக்கள் திடீர் சாலை மறியல்

பாதுகாப்பான குடிநீர் வழங்க கோரி கிராம மக்கள் திடீர் சாலை மறியல்

ADDED : ஆக 11, 2011 02:28 AM


Google News
அரூர்: அரூர் அருகே பாதுகாப்பான குடிநீர் வழங்க கோரி கிராம மக்கள் திடீர் சாலை மறியலில் ஈடுபட்டனர்.

அரூர் அடுத்த பையர்நாயக்கன்பட்டி பஞ்சாயத்துக்கு உட்பட்ட மோட்டூர் கிராமம். இக்கிராமத்தில் 600க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசிக்கின்றனர். இங்குள்ள கிராம மக்களின் குடிநீர் தேவைக்காக 10,000 லிட்டர் கொள்ளளவு கொண்ட குடிநீர் மேல்நிலை நீர்த்தேக்க தொட்டியும், இரு சிறு மின் விசை குடிநீர் தொட்டியும், ஒரு அடிபம்பும் உள்ளன. இவற்றில் போதுமான தண்ணீர் இல்லாததால் கிராம மக்களின் குடிநீர் தேவைக்காக கடந்த ஐந்தாண்டுக்கு முன் இதே கிராமத்தில் உள்ள தாமலேரியில் 3 லட்ச ரூபாய் செலவில் கிணறு வெட்டப்பட்து. இதில், போதுமான தண்ணீர் உள்ளது. ஆனால், இந்த கிணற்றில் சுற்றுச்சுவர் இல்லாததால் மழைக்காலங்களில் தண்ணீர் உள்ளே புகுந்து அசுத்தமாக மாறிவிடுகிறது. மேலும் கிணறு திறந்த நிலையில் உள்ளதால் காற்றில் குப்பைகள் கிணற்று நீரில் கலந்து மாசுபடுகின்றன. இக்கிணற்றில் உள்ள மின் மோட்டாரும் அடிக்கடி பழுதடைந்து வருகின்றன. இதனையும் சரிசெய்யவில்லை. மின்மோட்டாரை சரிசெய்து கிணற்றிற்கு சுற்றுச்சுவர் கட்டி பாதுகாக்கப்பட்ட குடிநீர் வசதியை இந்த கிராம மக்களுக்கு வழங்க வேண்டும் என கடந்த இரு ஆண்டுகளாக இப்பகுதி மக்கள் கலெக்டரிடம், அரூர் ஆர்.டி.ஓ., பி.டி.ஓ.,க்களிடம் பலமுறை மனு அளித்தனர். மனு மீது நடவடிக்கை எடுக்காததால் நேற்று காலை 7 மணியளவில் சுமார் 300க்கும் மேற்பட்ட ஆண்களும், பெண்களும் காலி குடங்களுடன் அரூர் - திருவண்ணாமலை சாலையில் பையர்நாயக்கன்பட்டியில் சாலை மறியலில் ஈடுபட்டனர். தகவலறிந்த கோட்டப்பட்டி இன்ஸ்பெக்டர் சம்பவ இடத்திற்கு வந்தார். அங்கு பெண்களுக்கும், போலீஸாருக்கும் வாக்குவாதம் ஏற்பட்டது. பொதுமக்கள் சாலைமறியலை கைவிடாததால் ஆர்.டி.ஓ., சுப்புலட்சுமி, டி.எஸ்.பி., சம்பத், வருவாய்துறையினர் பொதுமக்களிடம் சமாதான பேச்சுவார்த்தை நடத்தினர். கிராம மக்களுக்கு உரிய குடிநீர் வசதி செய்து கொடுப்பதாக அதிகாரிகள் உறுதி அளித்தனர். பின்னர் சாலைமறியல் கைவிடப்பட்டது. இதனால் அப்பகுதியில் 3 மணிநேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. சாலைமறியலில் ஈடுபட்ட 53 பேர் மீது போலீஸார் வழக்குப்பதிவு செய்துள்ளனர். உள்ளாட்சி பிரதிநிதிகள் பதிவிக்காலம் முடிவடையும் நிலையில் உள்ளதால் அவர்கள் குடிநீர் பிரச்னையில் தலையிடாததால் ஆங்காங்கே சாலைமறியல் நடக்கிறத. எனவே இதற்கு மாவட்ட நிர்வாகம் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் எதிர்பார்க்கின்றனர்.





      Our Apps Available On




      Dinamalar

      Follow us