ADDED : ஆக 02, 2011 01:20 AM
ப.வேலூர்: ஆடி பண்டிகையை முன்னிட்டு, தொடர் படகு போட்டி நாளை (ஆக.,3) ப.வேலூரில் நடக்கிறது.
ப.வேலூர் சோழன் பாய்ஸ் 'ஏ' குழு சார்பில், ஆடி பண்டிகையை முன்னிட்டு ஆண்டு தோறும் தொடர் படகு போட்டி நடத்தப்படுவது வழக்கம். இந்த ஆண்டு படகு போட்டி, நாளை (ஆக.,3) மாலை 4 மணிக்கு நடக்கிறது. பொத்தனூர் காவிரிக்கரையில் துவங்கும் இப்போட்டி, ப.வேலூர் சிவன் கோவிலில் முடிவடைகிறது. டி.எஸ்.பி., தம்பிதுரை போட்டியை துவக்கி வைக்கிறார். வெற்றி பெற்றவர்களுக்கு, மாஜி எம்.எல்.ஏ., நெடுஞ்செழியன் பரிசு வழங்குகிறார். வக்கீல் தில்லைகுமார் கேடயம் வழங்குகிறார். போட்டியில் வெற்றி பெறும் வீரர்களுக்கு பரிசுத்தொகை மற்றும் கோப்பை வழங்கப்படுகிறது. ஏற்பாடுகளை சோழன் பாய்ஸ் 'ஏ' குழு நிர்வாகிகள், உறுப்பினர்கள் செய்துள்ளனர்.