ADDED : செப் 23, 2011 01:05 AM
அருப்புக்கோட்டை : அருப்புக்கோட்டை அ.தி.மு.க., வேட்பாளரை மாற்ற கோரி அ.தி.மு.க., கட்சியினர் சென்னைக்கு சென்றனர்.
உள்ளாட்சி தேர்தலில் அருப்புக்கோட்டை நகராட்சி தலைவர் பதவிக்கு அ.தி.மு.க., சார்பாக தர்மராஜ் என்பவரை கட்சி தலைமை அறிவித்தது. இதற்கு கட்சியில் ஒரு பகுதியினர் அதிருப்தி அடைந்தனர். இவரை மாற்ற கோரி கட்சியின் அருப்புக்கோட்டை தொகுதி செயலர் சிவசங்கரன் தலைமையில் சுமார் நூற்றுக்கும் மேற்பட்டவர்கள் வேன்களில் சென்னைக்கு சென்று முதல்வரிடம் கோரிக்கை மனு கொடுக்க சென்றனர்.