மாதிரி பள்ளியில் 36 பேர் சேர்க்கை
மாதிரி பள்ளியில் 36 பேர் சேர்க்கை
மாதிரி பள்ளியில் 36 பேர் சேர்க்கை
ADDED : ஆக 01, 2011 10:14 PM
திருப்பூர் : மூலனூர் மாதிரி பள்ளியில் ஆறாம் வகுப்பில் இந்தாண்டு 36 பேர் சேர்க்கை பெற்றுள்ளனர்.
மூலனூர் ஒன்றியத்தில் கடந்தாண்டு முதல் மாதிரி பள்ளி செயல்பட்டு வருகிறது. இப்பள்ளியில் சேர, மூலனூர் ஒன்றியத்துக்கு உட்பட்ட பள்ளிகளில் படித்து வரும் மாணவர்களுக்கு, ஜூலை இரண்டாவது வாரத்தில் சேர்க்கை நடத்தப்பட்டது. கடந்தாண்டு எழுத்து தேர்வு மூலம் ஆறு முதல் பிளஸ் 1 வரை 168 மாணவ, மாணவியர் சேர்க்கை பெற்றனர். இந்தாண்டு விதிமுறைகள் மாற்றப்பட்டு, நேர்முக தேர்வு மூலம் ஆறாம் வகுப்பில் 36 பேர் சேர்க்கை பெற்றுள்ளனர்.