ADDED : அக் 05, 2011 02:13 AM
பொள்ளாச்சி : பொள்ளாச்சி அடுத்த ஜமீன்ஊத்துக்குளியிலுள்ள போலீஸ் செக்
போஸ்ட் அருகே நேற்றுமுன்தினம் சப்-இன்ஸ்பெக்டர் காலேப் வாகன சோதனையில்
ஈடுபட்டார்.
அப்போது அவ்வழியாக, கரூரிலிருந்து மணல் ஏற்றி கொண்டு வந்த
லாரியை (டிஎன் 29 ஏஎக்ஸ் 2149) சோதனைக்கு உட்படுத்த முயன்றார். ஆனால்,
லாரியை நிறுத்தாமல் சென்றதால் போலீசார் குஞ்சிபாளையம் அருகே மடக்கி
பிடித்தனர். லாரியை சோதனையிட்ட போது, 'பர்மிட்' காலம் முடிந்து, 'பர்மிட்'
அளவுக்கு அதிகமாக மணல் ஏற்றி சென்றது தெரியவந்தது. லாரியிலிருந்த 4.5
யூனிட் மணலை பறிமுதல் செய்த போலீசார் தர்மபுரியை சேர்ந்த லாரி உரிமையாளர்
மற்றும் டிரைவர் விமலை (35) கைது செய்தனர். பறிமுதல் செய்த லாரி, மேற்கு
போலீஸ் ஸ்டேஷனுக்கு கொண்டு வரப்பட்டு, டிரைவரிடம் போலீசார் விசாரித்து
வருகின்றனர்.


