/உள்ளூர் செய்திகள்/மதுரை/புதூரில் டாஸ்மாக் கடை திறக்க பெண்கள் எதிர்ப்புபுதூரில் டாஸ்மாக் கடை திறக்க பெண்கள் எதிர்ப்பு
புதூரில் டாஸ்மாக் கடை திறக்க பெண்கள் எதிர்ப்பு
புதூரில் டாஸ்மாக் கடை திறக்க பெண்கள் எதிர்ப்பு
புதூரில் டாஸ்மாக் கடை திறக்க பெண்கள் எதிர்ப்பு
புதூர் : புதூரில் பெண்கள் அதிகம் நடமாடும் ஐ.டி.ஐ., பஸ் ஸ்டாப் அருகில் புதிதாக டாஸ்மாக் ஒயின் ஷாப் திறக்கக் கூடாது என பொதுமக்கள் தெரிவித்தனர்.
அப்பகுதியினர் கூறுகையில், 'புதிதாக துவங்க இருக்கும் ஒயின்ஷாப்பிற்கு எதிரிலேயே இரண்டு பக்கமும் செல்வதற்கான பஸ் ஸ்டாப்புகள் உள்ளன. இதை கருத்தில் கொள்ளாத அதிகாரிகள் குடியிருப்புகள் அதிகம் இல்லாத பகுதி என சான்று வழங்கி உள்ளனர். அதிகாரிகளிடம் கேட்டதற்கு, குடிமகன்கள் ஒயின்ஷாப்பிற்கு அரை கி.மீ., தூரம் நடந்து செல்ல வேண்டி உள்ளதால் இங்கு கடை வைக்க அனுமதி வழங்கப்பட்டது என்கின்றனர். இங்கு ஒயின்ஷாப் வந்தால் வேலைவாய்ப்பு அலுவலகம் மற்றும் ஐ.டி.ஐ.,க்கு வரும் பெண்கள் பெரிதும் பாதிக்கப்படுவர். இதனால் இப்பகுதியில் துவங்க இருக்கும் ஒயின்ஷாப்பின் பர்மிட்டிற்கு கலெக்டர் தடை விதிக்க வேண்டும், என பொதுமக்கள் கருத்து தெரிவித்துள்ளனர்.


