ADDED : செப் 13, 2011 06:26 PM
கோவை : விசைத்தறி உரிமையாளர்களுக்கு, ஜவுளி <உற்பத்தியாளர்களுக்கும் இடையே கோவையில் நடைபெற்ற பேச்சுவார்த்தை தோல்வியில் முடிந்தது.
விசைத்தறி உரிமையாளர்கள் 100 சதவீத கூலி உயர்வு அளிக்க வேண்டும் என்பதை வலியுறுத்தி, கடந்த 15 நாட்களாக வேலைநிறுத்தத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இந்நிலையில், இப்பிரச்னைக்கு சுமூக தீர்வு காணும் பொருட்டு, கோவையில், கோவை மற்றும் திருப்பூர் மாவட்ட கலெக்டர்களின் தலைமையில் பேச்சுவார்த்தை நடைபெற்றது. ஜவுளி உற்பத்தியாளர்கள், 10 சதவீதம் மட்டுமே கூலி உயர்வு வழங்கப்படும் என்று தொடர்ந்து வலியுறுத்தி வந்ததால், பேச்சுவார்த்தை தோல்வியில் முடிந்தது. வேலைநிறுத்தம் தொடரும் என்று விசைத்தறி உரிமையாளர்கள் தெரிவித்துள்ளனர்.