Dinamalar-Logo
Dinamalar Logo


/செய்திகள்/தமிழகம்/மதுரை கிராமப்புற பள்ளியில் அமெரிக்க மாணவர்கள்

மதுரை கிராமப்புற பள்ளியில் அமெரிக்க மாணவர்கள்

மதுரை கிராமப்புற பள்ளியில் அமெரிக்க மாணவர்கள்

மதுரை கிராமப்புற பள்ளியில் அமெரிக்க மாணவர்கள்

ADDED : ஜூலை 21, 2011 06:51 PM


Google News
மதுரை: மதுரை மாவட்டத்திற்கு அமெரிக்க, கனடா நாட்டு மாணவர்கள் குழு வந்துள்ளது.

இந்திய கலாச்சாரத்தை பற்றி அறிந்து கொள்ளும் நோக்கத்துடன் கிறிஸ் என்பவர் தலைமையில் வந்த இக்குழு, டி.கல்லுப்பட்டி அருகே தும்மநாயக்கன்பட்டி பஞ்., யூனியன் நடுநிலைப் பள்ளிக்கு சென்றனர். அவர்களை தலைமை ஆசிரியர் ரகுராமச்சந்திரன் மற்றும் ஆசிரியர்கள் வரவேற்றனர். மாணவர்களுக்கு தன்சுத்தம் பேணுதல், நல்லொழுக்கம், பண்பாடு குறித்த ஆடல், பாடல், நாடகம் நடத்தினர். இந்திய உணவு, குடும்ப பழக்க வழக்கங்கள் உட்பட கலாச்சார விஷயங்களை கேட்டறிந்தனர். ஆசிரியர் ஜவஹர் ஏற்பாடுகளை செய்திருந்தார். பின் வாடிப்பட்டி, சேடப்பட்டி யூனியனில் உள்ள பள்ளிகளுக்குச் சென்றனர்.





      Our Apps Available On




      Dinamalar

      Follow us