/உள்ளூர் செய்திகள்/புதுக்கோட்டை/கொங்குநாடு இன்ஜி., கல்லூரியில் 5ம் ஆண்டு வகுப்பு துவக்க விழாகொங்குநாடு இன்ஜி., கல்லூரியில் 5ம் ஆண்டு வகுப்பு துவக்க விழா
கொங்குநாடு இன்ஜி., கல்லூரியில் 5ம் ஆண்டு வகுப்பு துவக்க விழா
கொங்குநாடு இன்ஜி., கல்லூரியில் 5ம் ஆண்டு வகுப்பு துவக்க விழா
கொங்குநாடு இன்ஜி., கல்லூரியில் 5ம் ஆண்டு வகுப்பு துவக்க விழா
ADDED : ஆக 24, 2011 01:12 AM
தொட்டியம்: திருச்சி மாவட்டம் தொட்டியம் தோளூர்பட்டி கொங்குநாடு பொறியியல் மற்றும் தொழில்நுட்ப கல்லூரியில் ஐந்தாம் ஆண்டு வகுப்புகள் துவக்க விழா நடந்தது.
விழாவுக்கு கல்வி நிறுவனங்களின் செயலாளர் தங்கவேலு வரவேற்றார். கொங்குநாடு கல்வி நிறுவனங்களின் தலைவர் பெரியசாமி தலைமை வகித்து குத்துவிளக்கேற்றி ஐந்தாம் வகுப்பு துவக்க விழாவை துவக்கி வைத்தார். விழாவில், பெங்களூரு பாப்பில் லீப் கம்பெனியில் துணை தலைவர் பங்கஜ்குமார் சிறப்பு விருந்தினராக பங்கேற்று பேசினார். இணைச்செயலாளர் அசோக்குமார், பொறியியல் கல்லூரி முதல்வர் டாக்டர் லூயிஸ் டிசோசா, பாலிடெக்னிக் கல்லூரி முதல்வர் அய்யாத்துரை மற்றும் கல்வியியல் துறை முதல்வர் (பொ) மருதை ஆகியோர் முதலாமாண்டு மாணவர்களை வாழ்த்தி வரவேற்று பேசினர். தாமு பங்கேற்று நல்ல தேர்ச்சி விகிதம் தந்த பேராசிரியர்களுக்கு தங்க நாணயங்களை பரிசாக வழங்கி பேசினார். விழாவில், மனிதவளத்துறைத் தலைவர்கள் பேராசிரியர் பாலசுப்பிரமணியன், மாணவர்கள் மற்றும் பெற்றோர்கள் உட்பட பலர் பங்கேற்றனர். பொருளாளர் தென்னரசு நன்றி கூறினார்.


