/உள்ளூர் செய்திகள்/திருநெல்வேலி/"கேரளாவிற்கு ரேஷன் அரிசி கடத்தலை தடுக்க புளியரை செக்போஸ்ட் நவீனப்படுத்த வேண்டும்'"கேரளாவிற்கு ரேஷன் அரிசி கடத்தலை தடுக்க புளியரை செக்போஸ்ட் நவீனப்படுத்த வேண்டும்'
"கேரளாவிற்கு ரேஷன் அரிசி கடத்தலை தடுக்க புளியரை செக்போஸ்ட் நவீனப்படுத்த வேண்டும்'
"கேரளாவிற்கு ரேஷன் அரிசி கடத்தலை தடுக்க புளியரை செக்போஸ்ட் நவீனப்படுத்த வேண்டும்'
"கேரளாவிற்கு ரேஷன் அரிசி கடத்தலை தடுக்க புளியரை செக்போஸ்ட் நவீனப்படுத்த வேண்டும்'
தென்காசி : 'கேரளாவிற்கு ரேஷன் அரிசி கடத்தப்படுவதை தடுக்க புளியரை செக்போஸ்ட் நவீனப்படுத்தப்பட வேண்டும்' என பொது தொழிலாளர் சங்கம் கோரிக்கை விடுத்துள்ளது.
இதனால் அதிகளவில் லாரி, வேன், பஸ்கள் உள்ளிட்ட வாகனங்களில் புளியரை வழியே கேரளாவிற்கு ரேஷன் அரிசி கடத்தப்பட்டு வருகிறது. செங்கோட்டையை மையமாக வைத்து கடத்தல் கும்பல் செயல்படுகிறது. கேரளாவில் தமிழக ரேஷன் அரிசி கிலோவிற்கு 15 ரூபாய் வரை விற்பனை செய்யப்பட்டு வருகிறது. இதன் காரணமாக ரேஷன் அரிசி கடத்தல் கும்பல் தீவிரமாக செயல்பட்டு வருகிறது.
இதனை தடுப்பதற்காக புளியரையில் அமைக்கப்பட்டுள்ள செக்போஸ்டில் பணியாற்றுபவர்கள் முறையாக செயல்படாததால் கடத்தல் எவ்வித இடையூறும் இன்றி நடக்கிறது. மேலும் மணல், ஹாலோ பிளாக் செங்கல்கள், எரிசாராயம் போன்றவையும் புளியரை வழியே கொண்டு செல்லப்படுகிறது. இதனை தடுக்கவும், கடத்தலில் ஈடுபடுவோரை கண்டு பிடித்து தண்டிக்கவும் புளியரை செக்போஸ்ட் நவீனமயமாக்கப்பட வேண்டும்'' என கோரிக்கை மனுவில் ராமசுப்பிரமணியன் கூறியுள்ளார்.