பந்தலூர் : பந்தலூர் அருகே அத்திச்சால் பகுதியில் மழையில் மண் சரிவு ஏற்பட்டது.
அத்திச்சால்-படிச்சேரி செல்லும் சாலையில் நேற்று முன்தினம் மழையின் காரணமாக மண் சரிவு ஏற்பட்டது. மண் சரிவு ஏற்பட்டதையடுத்து போக்குவரத்து பாதிக்கப்பட்டதால் கிராமத்து இளைஞர்களும், மகளிர் குழுவினரும் மண்ணை அகற்றி சாலையை சீரமைத்தனர். எனினும் மேலும் மண் சரிவு ஏற்படும் பாதிப்பு உள்ளதால் தடுப்பு சுவர் அமைத்து தர வேண்டும் என்று இப்பகுதியினர் வலியுறுத்தியுள்ளனர்.