Dinamalar-Logo
Dinamalar Logo


/உள்ளூர் செய்திகள்/ராமநாதபுரம்/பாதாள சாக்கடை திட்டம் : நகராட்சி கவுன்சிலில் காரசாரம்

பாதாள சாக்கடை திட்டம் : நகராட்சி கவுன்சிலில் காரசாரம்

பாதாள சாக்கடை திட்டம் : நகராட்சி கவுன்சிலில் காரசாரம்

பாதாள சாக்கடை திட்டம் : நகராட்சி கவுன்சிலில் காரசாரம்

ADDED : ஆக 30, 2011 12:00 AM


Google News

ராமநாதபுரம்:'ராமநாதபுரத்தில் பாதாள சாக்கடை திட்டம் எப்போது நிறைவேறும்' என கவுன்சிலர்கள் கேள்வி எழுப்பினர்.ராமநாதபுரம் நகராட்சி கவுன்சில் கூட்டம் தலைவர் லலிதகலா தலைமையிலும் துணைத்தலைவர் ராஜாஉசேன், கமிஷனர் முஜ்புர்ரஹ்மான், சுகாதார அலுவலர் சந்திரன் ஆகியோர் முன்னிலையிலும் நடந்தது.

கூட்ட விவாதம்:



சீனிவாசன்: சாலை தெரு, மதுரை ரோட்டில் ரோடு பணி பாதியில் நிற்பதற்கு காரணம் என்ன?



கவிதா: நகராட்சியில் பாதாள சாக்கடை திட்டப்பணிகள் நிலை குறித்து மக்களுக்கு பல்வேறு சந்தேகங்கள் எழுந்துள்ளன. திட்டம் நிறைவேறுமா அல்லது நிறைவேறாதா.



கமிஷனர்: சாலைத்தெருவில் ரோடு பணி விரைவில் முடிக்கப்படும். இறுதிகட்ட பணிகள் முடிப்பதில் தாமதம் ஏற்பட்டுள்ளது. குடிநீர் வடிகால் வாரியத்தினர், 2012 ஜனவரியில் பயன்பாட்டிற்கு கொண்டு வரப்படும் என உறுதியளித்துள்ளனர். இவ்வாறு விவாதம் நடந்தது.







      Our Apps Available On




      Dinamalar

      Follow us