/உள்ளூர் செய்திகள்/நாமக்கல்/பாரத ஸ்டேட் வங்கி சார்பில் ஃபேன் வழங்கல்பாரத ஸ்டேட் வங்கி சார்பில் ஃபேன் வழங்கல்
பாரத ஸ்டேட் வங்கி சார்பில் ஃபேன் வழங்கல்
பாரத ஸ்டேட் வங்கி சார்பில் ஃபேன் வழங்கல்
பாரத ஸ்டேட் வங்கி சார்பில் ஃபேன் வழங்கல்
ADDED : ஆக 15, 2011 02:06 AM
நாமக்கல்: பாரத ஸ்டேட் வங்கி நாமக்கல் கிளை சார்பில், ஊராட்சி நடுநிலை பள்ளிகளுக்கு மின்விசிறி வழங்கப்பட்டது.
பாரத ஸ்டேட் வங்கி நாமக்கல் கிளை சார்பில், ஆண்டு தோறும் சமுதாய சேவை திட்டத்தின் கீழ் பல்வேறு நலத்திட்ட உதவிகளை வழங்கப்படுகிறது. அதன்படி, பள்ளிகளுக்கு நலத்திட்டம் வழங்கும் விழா, நாமக்கல் அடுத்த சின்னமுதலைப்பட்டி ஊராட்சி நடுநிலைப்பள்ளியில் நடந்தது. வங்கி முதுநிலை மேலாளர் பஞ்சாட்சரம் தலைமை வகித்தார். மேலாளர் மதியழகன் வரவேற்றார். விழாவை முன்னிட்டு, சின்னமுதலைப்பட்டி, பெரியப்பட்டி மற்றும் முதலைப்பட்டி ஆகிய ஊராட்சி நடுநிலைப்பள்ளிகளுக்கு, 10 மின் விசிறிகள் வழங்கப்பட்டது. நிகழ்ச்சியில், வங்கி மேலாளர்கள் ராகவன், செல்வகுமார், பள்ளி தலைமையாசிரியர்கள், ஆசிரியர்கள், மாணவ, மாணவியர் உள்பட பலர் பங்கேற்றனர்.


