ADDED : செப் 17, 2011 01:22 AM
தர்மபுரி: தென் மாவட்டங்களில் சமூக நல்லிணக்கத்தை ஏற்படுத்த கோரி இந்திய கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் வரும் 20ம் தேதி தர்மபுரியில் உண்ணாவிரதம் நடக்கிறது.
அக்கட்சியின் மாவட்ட செயலாளர் இளம்பரிதி வெளியிட்ட அறிக்கை: கடந்த 11ம் தேதி பரமக்குடியில் போலீஸார் நடத்திய துப்பாக்கிசூட்டில் ஏழு பேர் பலியாகினர். போதிய முன் எச்சரிக்கை நடவடிக்கை எடுக்கப்பட்டிருந்தால், கலவரத்தை தடுத்திருக்கலாம். இது குறித்து நீதி விசாரணைக்கு அரசு உத்தரவிட்டுள்ள நிலையில், விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும். தென் மாவட்டங்களில் சமூக நல்லிணக்கத்தை ஏற்படுத்த அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பதை வலியுறுத்தி இந்திய கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் நடக்கும் உண்ணாவிரதத்துக்கு மாவட்ட துணை செயலாளர் ஆறுமுகம் தலைமை வகிக்கிறார். பென்னாகரம் எம்.எல்.ஏ., நஞ்சப்பன் துவக்கிவைக்கிறார். மாநில, மாவட்ட நிர்வாகிகள் மற்றும் கட்சி உறுப்பினர்கள் திரளாக கலந்துகொள்ள வேண்டும். இவ்வாறு அறிக்கையில் தெரிவித்துள்ளார்.