/உள்ளூர் செய்திகள்/திருப்பூர்/பெதப்பம்பட்டியில் உயர்மின் கோபுரம் அமைக்கும் பணி இழுபறியால் அதிருப்திபெதப்பம்பட்டியில் உயர்மின் கோபுரம் அமைக்கும் பணி இழுபறியால் அதிருப்தி
பெதப்பம்பட்டியில் உயர்மின் கோபுரம் அமைக்கும் பணி இழுபறியால் அதிருப்தி
பெதப்பம்பட்டியில் உயர்மின் கோபுரம் அமைக்கும் பணி இழுபறியால் அதிருப்தி
பெதப்பம்பட்டியில் உயர்மின் கோபுரம் அமைக்கும் பணி இழுபறியால் அதிருப்தி
ADDED : ஆக 23, 2011 11:22 PM
உடுமலை : பெதப்பம்பட்டி நால்ரோட்டில் ஆக்கிரமிப்புகளை அகற்ற நெடுஞ்சாலைத்துறை தயக்கம் காட்டுவதால், உயர் மின் கோபுரம் மற்றும் ரவுண்டனா அமைக்கும் பணியில் இழுபறி ஏற்பட்டுள்ளது.
உடுமலை அருகே பெதப்பம்பட்டியில், பொள்ளாச்சி-தாராபுரம் மாநில நெடுஞ்சாலையும், உடுமலை-செஞ்சேரிமலை ரோடு சந்திக்கும் நால்ரோடு உள்ளது. பொள்ளாச்சி மற்றும் உடுமலையிலிருந்து பெதப்பம்பட்டிக்கு இயக்கப்படும் பஸ்கள் நால்ரோட்டில் நிறுத்தப்படுகின்றன. அரசு பள்ளி மற்றும் தனியார் பாலிடெக்னிக் உட்பட கல்வி நிறுவனங்கள் மற்றும் தொழிற்சாலைகள் அதிகரித்துள்ளதால் பெதப்பம்பட்டி நால்ரோட்டில் போக்குவரத்து நெரிசல் தொடர்கதையாக உள்ளது. கடந்த இரண்டு ஆண்டுகளுக்கு முன் நெடுஞ்சாலைத்துறையினர் ஆக்கிரமிப்புகளை அகற்றி ரோடு சந்திப்பு விரிவாக்க பணிகளை பெதப்பம்பட்டியில் மேற்கொண்டனர். சில மாதங்களில் மீண்டும் ஆக்கிரமிப்பு பல மடங்கு அதிகரித்தது. பொள்ளாச்சி மற்றும் அம்மாபட்டி போன்ற கிராமங்களுக்கு இயக்கப்படும் பஸ்கள் நிறுத்தும் பகுதியில் ஆக்கிரமிப்புகள் அதிகரித்ததால் பஸ்கள் ரோட்டில் நிறுத்தப்படும் நிலை உருவானது. இதனால், மாநில நெடுஞ்சாலையில் வரும் வாகனங்கள் செல்ல வழியில்லாமல் போக்குவரத்து நெரிசல் அதிகரித்து விபத்துகள் ஏற்பட்டு வருகின்றன. நெரிசலையும், விபத்துகளையும் தவிர்க்க ஆக்கிரமிப்புகளை அகற்றி ரவுண்டனா அமைக்க வேண்டும் என பொதுமக்கள் சார்பில் கோரிக்கை விடப்பட்டு வருகிறது. ஆனால், நெடுஞ்சாலைத்துறையினர் ஆக்கிரமிப்புகளை அகற்ற தயக்கம் காட்டி வருகின்றனர். இந்நிலையில், ஊராட்சி நிர்வாகம் மற்றும் வியாபாரிகள் சங்கம் சார்பில் நால்ரோட்டில் உயர் மின் விளக்கு கோபுரம் அமைக்க பொள்ளாச்சி எம்.பி., சுகுமாரிடம் கோரிக்கை மனு அளிக்கப்பட்டது. இதனையடுத்து, எம்.பி., 4 லட்சத்து 50 ஆயிரம் ரூபாய் நிதியை பெதப்பம்பட்டி நால்ரோட்டில் உயர் மின் விளக்கு கோபுரம் அமைக்க ஒதுக்கினார்.இதனால், அப்பகுதி மக்கள் மகிழ்ச்சியடைந்தனர். கோபுரத்தை நால்ரோட்டின் மையப்பகுதியில் அமைப்பதன் மூலம் சிறிய ரவுண்டானா போன்ற அமைப்பு உருவாகி நெரிசல் பெருமளவு குறையும். மையப்பகுதியில் இப்பணிகளை மேற்கொள்ள ஆக்கிரமிப்புகள் அகற்றப்படும் என பொதுமக்கள் எதிர்பார்த்திருந்தனர். ஆனால், நெடுஞ்சாலைத்துறை உட்பட பிற துறை அதிகாரிகள் பணிகளை மேற்கொள்ள நால்ரோட்டிற்கு பயன்பெறாத இடத்தை ஆய்வு செய்தனர். இது கிராம மக்களிடையே கடும் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது.