/உள்ளூர் செய்திகள்/திருவாரூர்/கொருக்கை சிவன் கோவில் கும்பாபிஷேகம் கோலாகலம்கொருக்கை சிவன் கோவில் கும்பாபிஷேகம் கோலாகலம்
கொருக்கை சிவன் கோவில் கும்பாபிஷேகம் கோலாகலம்
கொருக்கை சிவன் கோவில் கும்பாபிஷேகம் கோலாகலம்
கொருக்கை சிவன் கோவில் கும்பாபிஷேகம் கோலாகலம்
ADDED : செப் 09, 2011 01:54 AM
திருத்துறைப்பூண்டி: திருத்துறைப்பூண்டி அருகே கொருக்கை சிவகாமி உடனுறை
வீரட்டேஸ்வரர் கோவில் கும்பாபிஷேகம் நேற்று வெகு சிறப்பாக நடந்தது.
திருவாரூர் மாவட்டம் திருத்துறைப்பூண்டி அருகே உள்ள கொருக்கையில்
வீரட்டேஸ்வரர் கோவில், 11ம் நூற்றாண்டில் சோழர்களாலும், 13ம் நூற்றாண்டில்
பாண்டியர்களாலும் திருப்பணிகள் செய்யப்பட்ட, 900 ஆண்டுகள் பழமை வாய்ந்த
ஸ்தலமாகும். ராஜகோபுரத்துடன் விளங்கிய இக்கோவில் சிதிலமடைந்ததால்,
பக்தர்கள் மற்றும் இந்து சமய அறநிலையத்துறை சார்பில் கடந்த சில மாதம் முன்
திருப்பணிகள் செய்யப்பட்டன. கடந்த 6ம் தேதி, கணபதி ஹோமத்துடன் யாகசாலை
பூஜைகள் துவங்கி, புனித நீர் அடங்கிய கும்பங்களுக்கு சிறப்பு பூஜைகள்
நடந்தன. நேற்று காலை நான்காம் கால யாகசாலை பூஜைகள் நிறைவுற்று, காலை 10.45
மணிக்கு சிவாச்சாரியாõர்கள் வேத மந்திரங்கள் முழங்க, புனித நீர் கும்பங்களை
ஊர்வலமாக எடுத்து சென்றனர். 11.30 மணியளவில் கோபுர கலசங்களில் புனித நீர்
ஊற்றப்பட்டு, கும்பாபிஷேகமும், தொடர்ந்து ஸ்வாமி மற்றும் பரிவார
தெய்வங்களுக்கு மஹா அபிஷேகமும் நடந்தது. யாகசாலை பூஜைகளை சிவாச்சாரியார்கள்
வெங்டேஷ் ஈசான சிவம், பாலசுப்ரமணியம் தலைமையில் நடந்தது. ஏற்பாடுகளை
கோவில் இணை ஆணையர் இளங்கோ, உதவி ஆணையர் சிவராம் ராம்குமார், தக்கார்
நீதிமணி, யூனியன் கவுன்சிலர் சிங்காரவேல் மற்றும் திருப்பணிக் குழுவினர்
செய்திருந்தனர். பாதுகாப்பு ஏற்பாடுகளை இன்ஸ்பெக்டர் செந்தில்முருகன்
தலைமையில் போலீஸார் மேற்கொண்டனர்.