/உள்ளூர் செய்திகள்/விழுப்புரம்/பங்களாப்பேட்டை பகுதியில் குடிநீர் இன்றி மக்கள் அவதிபங்களாப்பேட்டை பகுதியில் குடிநீர் இன்றி மக்கள் அவதி
பங்களாப்பேட்டை பகுதியில் குடிநீர் இன்றி மக்கள் அவதி
பங்களாப்பேட்டை பகுதியில் குடிநீர் இன்றி மக்கள் அவதி
பங்களாப்பேட்டை பகுதியில் குடிநீர் இன்றி மக்கள் அவதி
ADDED : ஜூலை 13, 2011 01:12 AM
செஞ்சி : பங்களாப்பேட்டையில் ஒரு வாரமாக குடிநீர் இன்றி பொதுமக்கள்
அவதிப்படுகின்றனர்.
செஞ்சி ஒன்றியம் தேவதானம்பேட்டை ஊராட்சியின் ஒரு
பகுதியாக பங்களாபேட்டை உள்ளது. இங்கு நூற்றுக்கும் மேற்பட்ட குடும்பத்தினர்
வசித்து வருகின்றனர். இவர்களுக்கென தனியாக மேல்நிலை நீர் தேக்க தொட்டி
அமைத்து குடிநீர் விநியோகம் செய்கின்றனர். இந்த டேங்கில் இருந்து செல்லும்
குடிநீர் குழாயில் சிலர் மின் மோட்டார் பொருத்தி தண்ணீர் எடுப்பதுடன்,
குடிநீரை விவசாயத்திற்கும் முறைகேடாக பயன்படுத்தினர். இதனால் அனைவருக்கும்
குடிநீர் கிடைக்காமல் சிமென்ட் சாலைகளை உடைத்து பள்ளம் போட்டு தண்ணீர்
எடுத்தனர். அத்துடன் போதிய அள விற்கு மும்முனை மின்சாரம் இல்லாமல் குடிநீர்
விநியோகத்தை அரைகுறையாக செய்து வந்தனர். இதிலும் கடந்த ஒருவாரமாக சிக்கல்
ஏற்பட்டுள்ளது. இங்குள்ள மின் மோட்டார் பழுதானதால் குடிநீர் விநியோகம்
பாதிக்கப்பட்டுள்ளது. இப்பகுதியில் குடிநீர் விநியோகம் சீரடைய அதிகாரிகள்
நடவடிக்கை எடுக்க வேண்டும்.