ADDED : ஜூலை 25, 2011 09:55 PM
ராமேஸ்வரம் : ராமேஸ்வரம் ராமநாதசுவாமி கோயில் ஆடித்திருக்கல்யாண திருவிழாவின் முதல் நாளான நேற்று முன்தினம் இரவில் ஒளி வழிபாடு முடிந்து பர்வதவர்த்தனி அம்பாள் வெள்ளி அன்ன வாகனத்தில் எழுந்தருளி நான்குரத வீதியில் உலா வந்தார்.
இரண்டாம் திருநாளான நேற்று அம்பாள் தங்கப்பல்லக்கில் எழுந்தருளல் நடந்தது. இதையொட்டி நேற்று காலை 9 மணிக்கு பர்வதவர்த்தனி அம்பாள் சர்வ அலங்காரத்தில் தங்கப்பல்லக்கில் எழுந்தருளினார். தொடர்ந்து நான்குரத வீதியில் உலா வந்து பக்தர்களுக்கு அருள்பாலித்தார்.