/உள்ளூர் செய்திகள்/விருதுநகர்/ஸ்ரீவி.,ஸ்ரீனிவாசபெருமாள் கோயிலில் 25 ஆண்டுகளுக்கு பின் நாளை கிரிவலம்ஸ்ரீவி.,ஸ்ரீனிவாசபெருமாள் கோயிலில் 25 ஆண்டுகளுக்கு பின் நாளை கிரிவலம்
ஸ்ரீவி.,ஸ்ரீனிவாசபெருமாள் கோயிலில் 25 ஆண்டுகளுக்கு பின் நாளை கிரிவலம்
ஸ்ரீவி.,ஸ்ரீனிவாசபெருமாள் கோயிலில் 25 ஆண்டுகளுக்கு பின் நாளை கிரிவலம்
ஸ்ரீவி.,ஸ்ரீனிவாசபெருமாள் கோயிலில் 25 ஆண்டுகளுக்கு பின் நாளை கிரிவலம்
ADDED : ஆக 11, 2011 10:56 PM
ஸ்ரீவில்லிபுத்தூர் : ஸ்ரீவில்லிபுத்தூர் திருவண்ணாமலை ஸ்ரீனிவாச பெருமாள் கோயிலில், 25 ஆண்டுகளுக்கு பின் நாளை, கிரிவலம் நிகழ்ச்சி நடக்கிறது.
ஸ்ரீவில்லிபுத்தூர் ஆண்டாள் கோயிலுக்குட்பட்ட திருவண்ணாமலை ஸ்ரீனிவாச பெருமாள் கோயில் தென் திருப்பதி என அழைக்கப்படுகிறது. இக்கோயிலுக்கு சனிக்கிழமை தோறும் விருதுநகர்,கோவில்பட்டி, மதுரை, திருநெல்வேலி உட்பட பல ஊர்களிலிருந்து ஏராளமான பக்தர்கள் வந்து செல்கின்றனர். இங்கு புரட்டாசி சனிக்கிழமைகளில் நடக்கும் கிரிவலம், கடந்த 25 ஆண்டுகளாக நடக்கவில்லை. இது பக்தர்களுக்கு மிகப்பெரிய குறையாக இருந்து வந்தது. இந்நிலையில், நாளை(ஆக.13 ) பவுர்ணமியை யொட்டி, கிரிவலம் நடக்க உள்ளது. அன்று மாலை 6 மணிக்கு கோயில் அமைந்துள்ள மலையை ஸ்ரீனிவாச பெருமாள் வலம் வருதல் நிகழ்ச்சி நடக்கிறது. இதற்காக 3கி.மீ., சுற்றளவுள்ள மலைப்பாதையை செப்பனிடும் பணி நடந்து வருகிறது. மேலும், கிரிவலம் வரும் பக்தர்களுக்காக குடிநீர் வசதி ஏற்படுத்தப்பட்டுள்ளது. இத்தகவலை செயல் அலுவலர் குருநாதன் தெரிவித்தார்.