/உள்ளூர் செய்திகள்/விழுப்புரம்/திருக்கோவிலூரில் புதிய பஸ் நிலையம் அரசு ஊழியர் சங்க மாநாடு கோரிக்கைதிருக்கோவிலூரில் புதிய பஸ் நிலையம் அரசு ஊழியர் சங்க மாநாடு கோரிக்கை
திருக்கோவிலூரில் புதிய பஸ் நிலையம் அரசு ஊழியர் சங்க மாநாடு கோரிக்கை
திருக்கோவிலூரில் புதிய பஸ் நிலையம் அரசு ஊழியர் சங்க மாநாடு கோரிக்கை
திருக்கோவிலூரில் புதிய பஸ் நிலையம் அரசு ஊழியர் சங்க மாநாடு கோரிக்கை
ADDED : ஜூலை 27, 2011 12:14 AM
திருக்கோவிலூர் : தமிழ்நாடு அரசு ஊழியர் சங்க திருக்கோவிலூர் கிளையின் 10 வது மாநாடு சங்க அலுவலகத்தில் நடந்தது.
வட்ட தலைவர் பாலசுப்ரமணியன் தலைமை தாங்கினார். துணைத் தலை வர் அன்புநிலவன் வரவேற் றார். மாநில துணைத் தலை வர் தங்கராசு, மாவட்ட செயலாளர் கலிவரதன், தலைவர் நாகராஜன் சிறப்புரை நிகழ்த்தினர். வட்ட செயலாளர், பொருளாளர் சீனுவாசன் ஆண்டறிக்கை வாசித்தனர். திருக்கோவிலூரில் புதிய பஸ் நிலையத்தை ஏற்படுத்த வேண்டும். இப்பகுதியில் அரசு கலைக் கல்லூரி அமைக்க வேண்டும். அரசு ஊழியர் சங்கத்திற்கு அங்கீகாரம் வழங்க வேண்டும் உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப் பட்டது. சங்கத்தின் புதிய தலைவராக கே.வி.பாலசுப்ரமணியன், துணைத் தலைவர்களாக கே.பாலசுப்ரமணியன், அன்புநிலவன், செயலாளராக சரவணன், வட்ட இணை செயலாளர்களாக அன்பழகன், முருகேசன், தினகர்பாபு, அய்யனார் தேர்வு செய்யப்பட்டனர்.