/உள்ளூர் செய்திகள்/காஞ்சிபுரம்/மூடிக்கிடக்கும் துணை சுகாதார நிலையம்சு.மணவாளன்மூடிக்கிடக்கும் துணை சுகாதார நிலையம்சு.மணவாளன்
மூடிக்கிடக்கும் துணை சுகாதார நிலையம்சு.மணவாளன்
மூடிக்கிடக்கும் துணை சுகாதார நிலையம்சு.மணவாளன்
மூடிக்கிடக்கும் துணை சுகாதார நிலையம்சு.மணவாளன்
ADDED : ஆக 23, 2011 11:21 PM
வாலாஜாபாத்:காஞ்சிபுரம் அடுத்த கூத்திரம்பாக்கம் கிராமத்தில், துணை
சுகாதாரம் நிலையம் செயல்படாததால், அப்பகுதி மக்கள் மருத்துவ வசதி
கிடைக்காமல் அவதிப்படுகின்றனர். காஞ்சிபுரத்திலிருந்து 10 கிலோ மீட்டர்
தொலைவில் மதுரமங்கலம் செல்லும் சாலையில், கூத்திரம்பாக்கம் கிராமம்
அமைந்துள்ளது. இங்கு 20 ஆண்டுகளுக்கு முன்பு துணை சுகாதார நிலையம்
கட்டப்பட்டது. இங்கு கூத்திரம்பாக்கம், தொடூர், நீர்வள்ளூர், ஆரியம்பாக்கம்
மற்றும் சுற்றியுள்ள கிராமங்களைச் சேர்ந்த மக்கள்,
சிகிச்சைப் பெற்று வந்தனர்.இங்கு தங்கியிருந்த செவிலியர், கர்ப்பிணி
பெண்களுக்கு பிரசவம் பார்ப்பது, பிரசவமானப் பெண்கள் மற்றும்
குழந்தைகளுக்கு, தடுப்பூசி போடுவது போன்றப் பணிகளை செய்து வந்தார்.
இச்சூழலில், சுகாதார நிலைய கட்டடம் பராமரிப்பின்றி சீரழிந்தது. இதனால்,
கடந்த இரண்டு வருடங்களாக, சுகாதார
கட்டடத்தில் செவிலியர் தங்குவதில்லை.பகலிலும் சரியாக வருவதில்லை.
சிகிச்சைப் பெற விரும்பும் பெண்கள், மொபைல் போனில் செவிலியரை தொடர்பு
கொள்கின்றனர். அவர்கள் நேரில் வந்து, சிகிச்சை அளிக்கின்றனர். துணை சுகாதார
நிலையம் மற்றும் செவிலியர் விடுதி கட்டடம் பயன்பாடின்றி வீணாகிறது.
இது குறித்து வட்டார மருத்துவ அலுவலர் தனசேகரன்
கூறும்போது,''கூத்திரம்பாக்கம் கிராமத்தில் உள்ள துணை சுகாதார கட்டடம்
பழுதடைந்துள்ளது. அதை சீரமைக்க நடவடிக்கை எடுக்கப்படும். அங்கு பணிபுரிந்த
செவிலியர், சூழற்சி முறையில் துணை கிராமங்களுக்கு சென்று, கர்ப்பிணிப்
பெண்களுக்கு சிகிச்சை அளித்து வருகிறார்' என்றார்.