/உள்ளூர் செய்திகள்/கரூர்/1,000 ஆண்டு கோவிலுக்குசெயல் அலுவலர் இல்லை1,000 ஆண்டு கோவிலுக்குசெயல் அலுவலர் இல்லை
1,000 ஆண்டு கோவிலுக்குசெயல் அலுவலர் இல்லை
1,000 ஆண்டு கோவிலுக்குசெயல் அலுவலர் இல்லை
1,000 ஆண்டு கோவிலுக்குசெயல் அலுவலர் இல்லை
ADDED : ஜூலை 17, 2011 02:09 AM
கரூர்: கரூர் கல்யாண பசுபதீஸ்வரர் கோவில் 1,000 ஆண்டுகால சிறப்பு பெற்றது. இக்கோவிலுக்கு கடந்த சில மாதங்களாக செயல் அலுவலர் நியமிக்கப்படாமல் உள்ளது.கரூர் மாவட்டம் சிவன் கோ வில்களுக்கு சிறப்பிடம் பெற்ற மாவட்டம். இங்குள்ள கோவில்களின் முன்னோடியாக ஆயிரம் ஆண்டுகால கோவிலான கல்யா ண பசுபதீஸ்வரர் கோவில் கரூர் நகரின் மையத்தில் உள்ளது.சேர, சோழ, பாண்டியர் ஆட்சி காலத்தின் பல சிறப்புகளை இக்கோவிலில் கல்வெட்டுகள் மூலம் அறிய முடிகிறது. இக்கோவிலில் கடந்த சில மாதங்களாக செயல் அலுவலர் இல்லாமல் உள்ளது.
தாண்தோன்றி பெருமாள் கோவில் உதவி ஆணையராக உள்ள முல்லை, பசுபதீஸ்வரர் கோவில் செயல் அலுவலராக பணியாற்றி வருகிறார். தற்போது அவர் உதவி ஆணையராக பதவி உயர்வு பெற்று விட்டதால், மாற்று இடம் செல்கிறார்.ஆகவே, பசுபதீஸ்வரர் கோவிலுக்கு தனியாக செயல் அலுவலர் நியமிக்க வேண்டும் என்ற கோரிக்கை பக்தர்கள் மத்தியில் எழுந்துள்ளது. செயல் அலுவலர் இல்லாததால் கோவில் திருவிழா மற்றும் முக்கிய நாளில் ஏற்படும் நிர்வாக பொறுப்புகள் குறித்த முடிவுகள் எடுக்க முடியாமல் கோவில் நிர்வாகம் தவித்து வருகிறது.பசுபதீஸ்வரர் கோவிலுக்கு தனியாக செயல் அலுவலர் நியமிக்க இந்து சமய அறநிலையத்துறையின் நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும்.