ADDED : ஆக 03, 2011 12:14 AM
திருவண்ணாமலை: திருவண்ணாமலை அடுத்த சேத்துப்பட்டு லூர்து நகரை சேர்ந்தவர்கள் சித்ரா (45), சாந்தி (45).
இவர்கள் இருவரும் தொடர்ந்து கள்ளச்சாராய விற்பனை செய்து வந்தனர். கள்ளச்சாராயம் விற்றதாக சித்ரா மீது 12 வழக்குகளும், சாந்தி மீது 16 வழக்குகளும் நிலுவையில் உள்ளன. இவர்கள் தொடர்ந்து சாராய விற்பனையில் ஈடுபட்டு வந்தனர்.போளூர் டி.எஸ்.பி., பலுல்லா உத்தரவின் பேரில், இன்ஸ்பெக்டர் செல்வழகன் மற்றும் போலீஸார் சித்ரா, சாந்தி ஆகியோரை கைது செய்தனர். இருவரையும் குண்டர் சட்டத்தின் கீழ் கைது செய்ய எஸ்.பி., சாமுண்டீஸ்வரி, கலெக்டர் அன்சுல் மிஸ்ராவுக்கு பரிந்துரை செய்தார்.கலெக்டர் இருவரையும் குண்டர் சட்டத்தின் கீழ் கைது செய்ய உத்தரவிட்டார். போலீஸார் இருவரையும் குண்டர் சட்டத்தில் கைது செய்தனர்.