/உள்ளூர் செய்திகள்/தர்மபுரி/மூதாட்டியிடம் குழந்தையை விட்டு சென்ற பெண்ணுக்கு போலீஸ் "வலை'மூதாட்டியிடம் குழந்தையை விட்டு சென்ற பெண்ணுக்கு போலீஸ் "வலை'
மூதாட்டியிடம் குழந்தையை விட்டு சென்ற பெண்ணுக்கு போலீஸ் "வலை'
மூதாட்டியிடம் குழந்தையை விட்டு சென்ற பெண்ணுக்கு போலீஸ் "வலை'
மூதாட்டியிடம் குழந்தையை விட்டு சென்ற பெண்ணுக்கு போலீஸ் "வலை'
ADDED : செப் 17, 2011 01:22 AM
தர்மபுரி: தர்மபுரி அரசு மருத்துவமனையில் மூதாட்டியிடம் பெண் குழந்தையை ஒப்படைத்துவிட்டு மாயமான பெண்ணை போலீஸார் தேடிவருகின்றனர்.
தர்மபுரி அரசு மருத்துவமனை தொட்டில் குழந்தை மையத்தில் ஒப்படைக்கப்படும் குழந்தைகள் மற்றும் பெற்றோர்கள் குறித்து முழு விபரங்கள் பெறப்பட்ட பின்னரே குழந்தைகள் பெறப்படுகிறது. இதனால், முறைதவறி பிறந்த குழந்தைகளை தொட்டில் மையத்தில் ஒப்படைக்க முடியாத சிலர் மருத்துவமனை வளாகத்துக்குள் கொண்டுவந்து விட்டு செல்வது தற்போது அதிகரித்துவருகிறது.
பென்னாகரம் பகுதியில் மட்டும் கடந்த ஐந்து மாதத்தில் மூன்று சிசுக்கள் அனாதையாக மருத்துவமனை வளாகம் மற்றும் கோவில்களுக்கு அருகே கைவிடப்பட்டது. தர்மபுரி அரசு மருத்துவமனையில் கடந்த இரு மாதங்களுக்கு முன் ஒரு பெண் குழந்தை கேட்பாரற்று விடப்பட்டது. நேற்று மதியம் 2 மணிக்கு மருத்துவமனை வளாகத்துக்குள் பெண் குழந்தையுடன் வந்த பச்சை கலர் புடவை அணிந்திருந்த இளம் பெண் தனது உறவினரை பார்த்துவிட்டு வரும் வரையில் குழந்தையை பார்த்து கொள்ளுமாறு அங்குள்ள மூதாட்டியிடம் ஒப்படைத்துவிட்டு மாயமாகிவிட்டார். இதை கண்காணித்த தொட்டில் குழந்தை மைய ஊழியர்கள் மூதாட்டியிடம் விசாரித்தபோது, தன்னிடம் இக் குழந்தையை பார்த்துகொள்ளுமாறு ஒரு பெண் கூறினார். ஆனால் நீண்ட நேரம் ஆகியும் அவர் திரும்பி வரவில்லை என்றார். இதையடுத்து, மருத்துவமனை புறக்காவல் நிலை போலீஸாரிடம் தகவல் அளிக்கப்பட்ட பின் குழந்தை அரசு தொட்டில் மையத்தில் ஒப்படைக்கப்பட்டது. குழந்தையை விட்டு சென்ற பெண்ணை போலீஸார் தேடி வருகின்றனர்.