/உள்ளூர் செய்திகள்/திருநெல்வேலி/சிறுமி பலாத்காரம்நெல்லையில் இருவர் கைதுசிறுமி பலாத்காரம்நெல்லையில் இருவர் கைது
சிறுமி பலாத்காரம்நெல்லையில் இருவர் கைது
சிறுமி பலாத்காரம்நெல்லையில் இருவர் கைது
சிறுமி பலாத்காரம்நெல்லையில் இருவர் கைது
ADDED : ஆக 22, 2011 02:33 AM
திருநெல்வேலி:நெல்லையில் சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்த இரு வாலிபர்கள்
கைது செய்யப்பட்டனர்.நெல்லை அருகே கொண்டாநகரத்தை சேர்ந்த ஒரு
குடும்பத்தினர் பல்வேறு பகுதிகளுக்கு சென்று வயல்களில் வாத்துப்பட்டி
அமைத்து வருகின்றனர்.
இக்குடும்பத்தினர் சில நாட்களாக கண்டியப்பேரி
குளக்கரை வாழைத்தோட்டத்தில் வாத்துப்பட்டி அமைத்திருந்தனர்.சம்பவத்தன்று
வாத்துப்பட்டி அமைக்கப்பட்டிருந்த வயலில் 15 வயது சிறுமி மட்டும்
இருந்தாள். சிறுமியின் பெற்றோர் வாத்துமுட்டைகளை விற்க வெளியே சென்றனர்.
அப்போது தனியாக இருந்த சிறுமியை பழைய பேட்டையை சேர்ந்த சிவா,
இசக்கிமுத்து(19), மற்றொரு இசக்கிமுத்து(19), கண்ணன் மற்றும் ஒருவர்
பாலியல் பலாத்காரம் செய்தனர்.இதுகுறித்து பேட்டை போலீசில் புகார்
அளிக்கப்பட்டது. இன்ஸ்பெக்டர் சோமசுந்தரம் விசாரணை நடத்தி இசக்கிமுத்து,
மற்றொரு இசக்கிமுத்துவை கைது செய்தார். பலாத்காரம் செய்யப்பட்ட சிறுமி,
கைது செய்யப்பட்ட இருவர் பாளை. ஐகிரவுண்ட் ஆஸ்பத்திரிக்கு
மருத்துவப்பரிசோதனைக்கு அனுப்பப்பட்டனர். மற்றவர்களை போலீசார் தேடி
வருகின்றனர்.